இந்தியாவின்
தொன்மையான இதிகாசங்களுள் ஒன்று இராமாயணம் ஆகும். இரகு வம்ச அரசனான இராமனின்
கதையைக் கூறுவது இராமாயணம் ஆகும்.
(இராம+அயனம்
= இராமாயணம்) இக்கதையை முதலில் வடமொழியில் வால்மீகி, வசிட்டர், போதாயனார்
ஆகிய மூவரும் செய்தனர்.
தமிழ்மொழியில்இராமகாதையாக வடித்தவர் கம்பர்
ஆவார். கம்பர் எழுதியதால் இக்காப்பியம் கம்பராமாயணம் என வழங்கப்பெறலாயிற்று.
கம்பராமாயணம்
ஆறு காண்டங்களைக் கொண்டு விளங்குகிறது. காண்டங்கள் என்பவை காப்பியத்தின்
பெரும்பிரிவுகளைக் குறிக்கும்.
கம்பராமாயணம் ஆறு காண்டங்களைக் கொண்டு
விளங்குகிறது.
- பாலகாண்டம் - இருபத்துநான்கு படலங்கள்.
- அயோத்தியா காண்டம் - பதின்மூன்று படலங்கள்.
- ஆரண்ய காண்டம் - பதின்மூன்று படலங்கள்.
- கிட்கிந்தா காண்டம் – பதினேழு படலங்கள்
- சுந்தர காண்டம் – பதினான்கு படலங்கள்
- யுத்த காண்டம் - நாற்பத்து இரண்டு படலங்கள்
ஒவ்வொரு
காண்டமும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்கும். அத்தகு உட்பிரிவுகளுக்குப் படலம் என்று
பெயர்
இந்நூலின்
சிறப்பு கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்கு
கதி என்பர் .
No comments:
Post a Comment