19 November, 2014

கரிம வேதியியல் பரிணாமம் குறித்த லாமார்க்கின் கருத்து


ஜீன் பாப்டைஸ் லாமார்க் (1744-1829) உடலுறுப்புப் பயன்பாடு பற்றிய விதி குறித்து விளக்கியிருந்தார் . இதன்படி , தொடர்ந்து அதிகப் பயன்பாட்டில் இருக்கும் உறுப்புகள் நன்கு வளர்ச்சியுறும் என்றும் , பயன்படா உறுப்புகள் நாளடைவில் பயன் இழந்து சிறுத்துப் போகும் என்றும் விளக்கியிருந்தார் .

லாமார்க் இவ்விதியை மெய்ப்பிக்க , ஒட்டகச்சிவிங்கியின் கழுதை எடுத்துகாட்டாகக் கொண்டு , உயரமான மரக்கிளைகளின் இலைகளைப் பறித்து உண்பதற்காக நீட்டிய கழுத்து நாளடைவில் நீளமாக மாறியதென்றும் , தேவையும் எண்ணமுமே இம்மாற்றத்திற்குக் காரணமென்றும் விளக்கியிருந்தார். 

இன்றைய கேள்விகள் - 19/11/2014

1. மாவட்ட  நீதிபதிகளை  ............... நியமிக்கிறார்
A.ஆளுநர் 
B.மாவட்ட  ஆட்சியர்
C.முதலமைச்சர்
D.இந்திய  குடியரசு தலைவர்

2. தமிழ் நாட்டில்  பின்வரும்  வகையிலான  ..................கட்ட கிராம  உள்ளாட்சி  அரசு  செயல்படுகிறது.
A.ஒன்று
B.இரண்டு
C.மூன்று .
D.நான்கு

3 இந்தியா  பின்பற்றும்  ஆட்சி  முறை
A.பாராளுமன்ற  மக்களாட்சி  முறை
B.குடியரசுத் தலைவர்  மக்களாட்சி  முறை
C.அரச முறை
D.சர்வாதிகார ஆட்சி  முறை

4 கீழே  கூறப்பட்டுள்ளவற்றில்  இந்திய  அரசமைப்பு சட்டத்தின்  எந்த பிரிவு  பாராளுமன்றம்  புதியதாக அகில  இந்திய  அரசுப்பணியை  உருவாக்க  வகை  செய்கிறது ?
A.பிரிவு  303
B.பிரிவு  307
C.பிரிவு   309
D.பிரிவு  312 

5. 42 வது  அரசமைப்பு   திருத்தச் சட்டம்  இயற்றப்பட்ட ஆண்டு  ----------------
A. 1947
B. 1950
C. 1963
D. 1976  

6. இந்திய  தேர்தல்  ஆணையம்  --------------
உறுப்பினர்களை  கொண்ட ஓர்  அமைப்பு
A. 1
B. 2
C. 3 
D. 4

7. இன  ஒதுக்கல்  கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு  -------------
A.  1990
B.  1991
C.  1890
D.  1989

8. கோடக்ஸ் அலிமெண்டேஷன்  கமிஷனால்  நிறுவப்பட்ட  நிறுவனங்கள்
A. FAO  &  WHO 
B. UNESCO  & UNILEF
C. UNDP & UNESCO
D. மேற்கண்ட  அனைத்தும்

  9. பஞ்சாயத்து  ராஜ்  முறைக்கு  அரசமை  ப்பு  ரீதியான  அங்கீகாரம்  கொடுத்த திருத்தம்  எது ?
A.  73 _ வது  திருத்தம் 
B.  74 _ வது  திருத்தம்
C.  64 _ வது  திருத்தம்
D.  72 _ வது  திருத்தம்

10. இந்திய  அரசமைப்பு  சட்டத்தில் உள்ள  51(A) சரத்தில் அடிப்படை கடமைகள்  எந்தச்  சட்டத் திருத்தத்தின்  மூலம்  சேர்த்துக்  கொள்ளப்பட்டது ?
A.  41 _ வது  திருத்தம்
B.  42 _ வது  திருத்தம் 
C.  43 _ வது  திருத்தம்
D.  44 _ வது  திருத்தம் .


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...