21 July, 2014

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் - ஜோகோவிச் முதலிடம்



ஜோகோவிச் மீண்டும் முதலிடம்

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால், இரண்டாவது இடத்துக்குச் சென்றார்.

இது அவரது 2-வது விம்பிள்டன் பட்டமாகும். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் அவர் விம்பிள்டன் சாம்பியன் ஆனார். ஒட்டுமொத்தமாக 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை அவர் வென்றுள்ளார்.

இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு விம்பிள்டன் சாம்பியன் ஆனபோதுதான் ஜோகோவிச் முதல்முறையாக தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். இப்போது மீண்டும் விம்பிள்டன் வெற்றி மூலம் முதலிடத்துக்கு வந்துள்ளார்.

மகளிர் ஒற்றையர் தரவரிசையில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 

உலகக் கோப்பை கால்பந்து போட்டி-ஜெர்மனி உலக சாம்பியன்


உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் வென்றது. ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வென்றது.

ஜெர்மனியின் 22 வயது இளம் வீரர் மரியோ கோட்ஸே 113-வது நிமிடத்தில் கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தார். இதன் மூலம் சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியன் ஆனது.

சுமார் 24 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனி மீண்டும் உலக சாம்பியனாகியுள்ளது.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா அணியை ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் சிறந்த வீரருக்கான தங்க பந்து விருது அர்ஜென்டீனா அணி கேப்டன் லயோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் தங்க ஷூ விருதுக்கு கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் அதிகபட்சமாக 6 கோல்கள் அடித்தார்.

சிறந்த கோல் கீப்பருக்கான ‘கோல்டன் கிளவ்’ விருது ஜெர்மனி கோல் கீப்பர் நியாருக்கு வழங்கப்பட்டது.

அடுத்த உலகக் கோப்பை போட்டி 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

கணிதவியலில் புதிய கண்டுபிடிப்பு: இந்திய அறிஞருக்கு பரிசு

கணிதவியலில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்க முடியாமல் இருந்த சிக்கலான கோட்பாட்டுக்கு இந்தியாவைச் சேர்ந்த நிகில் ஸ்ரீவாஸ்தவா, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் மார்க்கஸ், டேனியல் ஸ்பீல்மேன் ஆகியோர் தீர்வு கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்புக்காக, இவர்கள் மூவருக்கும் அமெரிக்காவில் உள்ள கணிதவியல் மற்றும் தொழில்துறையியல் கூட்டமைப்பு சார்பில் "ஜார்ஜ் போல்யா-2014' என்ற பரிசு வழங்கப்பட்டுள்ளது.
"குவாண்டம் மெக்கானிக்ஸ்' உடன் தொடர்புடைய கணிதவியல் கோட்பாடுகளுக்கு, கணிதவியல் நிபுணர்களான காடிசன், சிங்கர் ஆகிய இருவரும், 1959ஆம் ஆண்டு ஒரு கோட்பாட்டை வெளியிட்டனர். ஆனால் அந்தக் கோட்பாடு நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், அதற்கு நிகில் ஸ்ரீவாஸ்தவா உள்ளிட்ட மூவரும் நிரூபணம் கண்டுபிடித்துள்ளனர்.

ஆன்டிபயாடிக் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்- அடுத்தடுத்த இடங்களில் சீனா, அமெரிக்கா

ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

சீனா, அமெரிக்கா ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

2000 முதல் 2010-ம் ஆண்டு வரை ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய நாடுகள் குறித்து பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள் ஆய்வு நடத் தினர். 

இதில் உலகளாவிய அளவில் 10 ஆண்டுகளில் ஆன்டி பயாடிக் மருந்துகளின் பயன்பாடு 36 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2010-ம் ஆண்டில் ஆன்டி பயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்திய நாடுகள் குறித்து 71 நாடுகளில் ஆய்வு நடத்தப் பட்டது. 


இதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

சீனா, அமெரிக்கா ஆகி யவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் 2-வது பெரிய நகரம் டெல்லி



அதிக மக்கள்தொகை கொண்ட உலகின் 2-வது மிகப்பெரிய நகராக டெல்லி உருவெடுத்துள்ளது.

 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலை ஐ.நா. சபை கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது.

இதில் முதலிடத்தை ஜப்பான் தலைநகரம் டோக்கியோ பிடித்துள்ளது.

 அந்த நகர மக்கள் தொகை 3 கோடியே 80 லட்சம் ஆகும். அதற்கு அடுத்த இடத்தை இந்திய தலைநகர் டெல்லி பிடித்துள்ளது.

டெல்லி மக்கள் தொகை இரண்டரை கோடியாகும். 2030-ம் ஆண்டு வரை இரண்டாவது இடத்தை டெல்லி தக்க வைக்கும் என்றும் 2030-ம் ஆண்டில் டெல்லியின் மக்கள் தொகை 3.6 கோடியாக உயரும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இன்றைய கேள்விகள் - 21/07/2014







எழுத்து - PART II- 9 ஆம் வகுப்பு சமச்சீர்






எழுத்து - PART I - 9 ஆம் வகுப்பு சமச்சீர்





இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...