பொருள் தருக :
- ஆழி – கடல்
- விசும்பு – வானம்
- செற்றான் – வென்றான்
- அரவு – பாம்பு
- பிள்ளைக்குருகு – நாரைக்குஞ்சு
- வள்ளை – ஒருவகை நீர்க்கொடி
- கடா – எருமை
- வெளவி – கவ்வி
- சங்கின் பிள்ளை – சங்கின்குஞ்சுகள்
- கொடி – பவளக்கொடி
- கோடு – கொம்பு
- கழி – உப்பங்கழி
- திரை – அலை
- மேதி – எருமை
- கள் – தேன்
- புள் – அன்னம்
- சேடி – தோழி
- ஈரிருவர் – நால்வர்
- கடிமாலை – மணமாலை
- தார் – மாலை
- காசினி – நிலம்
- வெள்கி – நாணி
- ஒண்தாரை – ஒளிர்மிக்க மலர்மாலை
- மல்லல் – வளம்
- மடநாகு – இளைய பசு
- மழவிடை – இளங்காளை
- மறுகு – அரசவீதி
- மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும்.
- சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். இதில் 431 வெண்பாக்கள் உள்ளன
ஆசிரியர் குறிப்பு :
- நளவெண்பா இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர்.
- பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார். பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
- அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார்.
- அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று.
- இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன.
- இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
- ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்த சந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.
- அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும்.