01 December, 2014

இன்றைய கேள்விகள் - 01/12/14

1.ஒரெழுத்து ஒரு மொழியைத் தேர்க “கா”
A. சோலை
B. பாலை
C. வயல்
D. கறுப்பு


2.' துண்டு ' என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது ?
A.ஆசாரக்கோவை 
B.நான்மணிக்கடிகை 
C.இனியவைநாற்பது 
D.சீவகசிந்தாமணி 
(நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார். கடிகை என்றால் பகுதி (துண்டு) என்று பொருள்)

3. ' தமிழ் வியாசர் 'என வழங்கப்படும் சான்றோர் யார் ?
A.சேரமான் பெருமாள் நாயனார் 
B.நாற்கவிராச நம்பி 
C.சேந்தனார் 
D.நம்பியாண்டார் நம்பி 

4." பழி நாணுவானை " - பெயர்ச் சொல்லின் வகையறிக 
A.தொழிற்பெயர் 
B.பண்புப்பெயர் 
C.பொருட்பெயர் 
D.வினையாலணையும் பெயர் 

5. கடலைக் குறிக்காத சொல்லைக் கண்டறிக 
A.ஆர்கலி 
B.வாரணம் 
C.பரவை 
D.ஊழி 

6.ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு 
A.மதராஸ் பட்டணத்தின் ஆவணம் 
B.புதுச்சேரியின் ஆவணம் 
C.ஆற்காட்டு நவாப்புகளின் ஆவணம் 
D.சேதுபதிகளின் ஆவணம் 

7. " தோற்பாவை " என்பது 
A.ஒரு வகை பொம்மை 
B.ஒரு வகை கூத்து 
C.ஒரு வகை இசை 
D.ஒரு வகை நாட்டியம் 

8. தமிழின் முதல் சிறுகதைத் தொகுதி 
A.அபிநவக் கதைகள் 
B.குளத்தங்கரை அரசமரம் 
C.மங்கையர்க்கரசியின் காதல் 
D.புலவர் வறுமை 
  •   சிறுகதை உலகின் தந்தை - செகாவ்
  •   சிறுகதை தோன்றிய  முதல் இந்திய மொழி - வங்காளி
  •   தமிழ்ச் சிறுகதையின்  முன்னோடி - வீரமாமுனிவர்
  •   தமிழின் முதல்  சிறுகதை - வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச    மரம்
  •   தமிழின் முதல்  சிறுகதை தொகுப்பு -மங்கையர்கரசியின் காதல்
  •   சிறுகதையின் தந்தை - வ.வே.சு.ஐயர் 

9. சேரமான் கணைக்கால் இரும்பொறையைப் பற்றிப் 
    பரிதிமாற் கலைஞர் எழுதிய  நாடக நூல் 
A.ரூபாவதி 
B.கலாவதி 
C.மான விஜயம் 
D.சித்திரக்கவி 

10. எல்லார்க்கும் நன்றாம் ---------------
A.பணிதல் 
B.பண்புடையன் ஆதல் 
C.நல்லொழுக்கம்
D.பொல்லாங்கை விடேல் 

11. தாயுமானவர் பாடலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ?
A.இராமலிங்க அடிகளார் 
B.அருணகிரியார் 
C.திரு . வி . க .
D.குணங்குடி மஸ்தான் சாகிபு 

12. தமிழகத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில்  பண்டையக் காலக்
 காசுகள் மிகுதியாகக் கிடைத்த பகுதி 
A.தருமபுரி , கரூர் பகுதி 
B.தென்காசி , திருநெல்வேலி பகுதி 
C.தேனி , கம்பம் பகுதி 
D.தஞ்சை , கும்பகோணம் பகுதி 

13. நடுநிசி நாய்கள் என்ற புதுக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் 
A.பசுவய்யா 
B.கலாப்ரியா 
C.தருமுசிவராமு 
D.இரா. மீனாட்சி 

14. உருவ வழிபாட்டை மறுத்த சித்தர் 
A.கடுவெளிசித்தர் 
B.அகத்தியர் 
C.பட்டினத்தார் 
D.கொங்கணச்சித்தர் 

15." பயில் " - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைக் காண்க 
A.பயின்ற 
B.பயின்று 
C.பயிலல் 
D.பயின்றான் 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...