21 November, 2014

இன்றைய கேள்விகள் - 21/11/14

1. ' இறைஞ்சிய ' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க 
A.இறை 
B.இறைஞ்சி 
C.இறைஞ்சு 
D.இறைஞ்ச

2. நேரு தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் எது பற்றி அதிகம் கூறியுள்ளார் ? 

A.உணவு 
B.உடல் நலம் 
C.நூல்கள் 
D.மருத்துவம்

3.' எனது கதைகள் பிரச்சனைகளின் பிரச்சினை ' என்று கூறியவர் 

A.கல்கி 
B.அறிஞர் அண்ணா 
C.ஜெயகாந்தன் 
D.சுஜாதா

4.விருத்தாசலம் என்பது யாருடைய இயற்பெயர் ? 

A.புதுமைப்பித்தன் 
B.வ.வே.சு. ஐயர் 
C.மெளனி
D.கல்கி

5. சமரச சன்மார்க்க நாடக சபையைத் தோற்றுவித்தவர் 

A.அறிஞர் அண்ணா 
B.சங்கரதாஸ் சுவாமிகள் 
C.டி.கே.எஸ். சகோதரர்கள் 
D.பம்மல் சம்பந்த முதலியார்

6. முக்தி நூல் என்று அழைக்கப்பெறுவது 

A.சீவகசிந்தாமணி 
B.மணிமேகலை 
C.சிலப்பதிகாரம் 
D.கம்பராமாயணம்

7.வீரயுகப்பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் 

A.அகநானுறு 
B.புறநானூறு 
C.ஐங்குருநூறு 
D.குறுந்தொகை

8.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக :

A.ஒழுக்கம் 
B.விழுப்பம் 
C.இடும்பை 
D.கெடும்

9.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக 

A.மலரடி 
B.தேன்மொழி 
C.பவளவாய் 
D.மொழியமுது

10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக 

A.ஏலாதி 
B.சிறுபஞ்சமூலம் 
C.திரிகடுகம் 
D.ஆசாரக்கோவை

11.இறைவனின் பிள்ளை என்று அழைக்கப்பட்டவர் 

A.திருஞானசம்பந்தர்
B.சுந்தரர் 
C.திருநாவுக்கரசர்
D.மாணிக்கவாசகர்

12.'புத்தரது ஆதிவேதம்' என்ற நூலை எழுதியவர் 

A.திருத்தக்கத்தேவர் 
B.சீத்தலைச்சாத்தனார் 
C.அயோத்திதாசர் 
D.தோலாமொழித்தேவர்

13.கலம்பக வகையில் எழுதப்பட்ட முதல் நூல் எது ?
A.மதுரைக்கலம்பகம் 
B.கச்சிக்கலம்பகம்
C.நந்திக்கலம்பகம்
D.திருவரங்கக்கலம்பகம்


14.' பத்து வகைக் குற்றங்கள் ' பற்றி உரைக்கும் நூல் எது ?
A.சிலப்பதிகாரம் 
B.சீவகசிந்தாமணி 
C.மணிமேகலை 
D.முதுமொழிக்காஞ்சி


15.பதிற்றுப்பத்து எந்த மன்னர்களைப் பற்றி பாடிய நூல் ?
A.பாண்டியர் 
B.சேரர் 
C.சோழர் 
D.பல்லவர்


ஜி 20 மாநாடு 2014



  • ஜி 20 மாநாடு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்து முடிந்துள்ளது. 
  • ஜி 20 மாநாடு: உலகில் வேகமாக வளர்ந்து வரும் 20 நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பே ஜி 20 ஆகும். 
  • இந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து தங்களுக்குள் கூடிப் பேசி பல முடிவுகள் எடுக்கின்றன.
  •  இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி 20 மாநாடு நடந்து முடிந்துள்ளது. 
  • இந்த மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சி,  வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்கள் முதன்மை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டன. 
  • வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் உறுப்பு நாடுகளுக்குள் குறைந்தது 2 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவது குறித்து ஆராயப்பட்டது. 
  • லைபீரியா, கினியா, சியாரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் எபோலா நோய் தாக்கத்தின் காரணமாக அடைந்த துயர்களுக்கு இந்த மாநாட்டில் ஆழ்ந்த வேதனை தெரிவிக்கப்பட்டது. 
  • மோடி பங்கேற்பு: மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கருப்புப் பணத்தை முழுமையாக மீட்டுவருவது, பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றும் என்ற கருத்தை வலியுறுத்தினார். 
  • இதற்காக சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...