29 November, 2014

இன்றைய கேள்விகள் - 29/11/14

1."உண்பது நாழி , உடுப்பவை இரண்டே " என்ற பாடலடியை
எழுதிய புலவர் ?
A.திருவள்ளுவர்
B.நக்கீரர் 
C.ஒளவையார்
D.கண்ணகனார்

2. ஒருமை பன்மை பிழையற்ற தொடரைக் காண்க
A.கால்கள் நடுங்குகின்றது
B.கால்கள் நடுங்குகின்றன 
C.கால் நடுங்குகின்றன
D.நடுங்குகின்றது கால்கள்

3.ஆதரவற்றவர்களுக்காக ஓளவை இல்லத்தை
ஆரம்பித்தவர்
A.முத்துலெட்சுமி 
B.தருமாம்பாள்
C.தில்லையடி வள்ளியம்மை
D.டாக்டர் இலட்சுமி

4.1876,2003 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்ட அகழ்வாய்வுகளில்
முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்ட இடம்
A.மதுரை
B.திருச்சி
C.ஆதிச்சநல்லூர்
D. புகளூர்

5.தமிழர்களை ஒப்பந்தக் கூலிகளாக ரீயுனியன் தீவிற்கு அழைத்துச்
சென்றவர்கள்
A.ஆங்கிலேயர்கள்
B.பிரெஞ்சுக்காரர்கள்
C.போர்த்துக்கீசியர்கள்
D.டச்சுக்காரர்கள்

6.மரங்களின் பெயரை தங்கள் ஊர் பெயராக வழங்கி வரும் மக்கள்
A.குறிஞ்சி நில மக்கள்
B.முல்லை நில மக்கள்
C.மரு த நில மக்கள்
D.நெய்தல் நில மக்கள்

7.தாயுமானவர் திருப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின்
எண்ணிக்கை
A.1452
B.1500
C.1542
D.1342

8.நிலக்கிழார் ஒழிப்பு போராட்டத்தை  நடத்தியவர்
A.அண்ணா
B.பெரியார்
C.காமராஜர்
D.முத்துராமலிங்கத்தேவர் 

9. தமிழ் லெக்சிகன் எத்தனை தொகுதிகளாக வெளியிடப்பட்டது ?

A. 6
B. 4
C. 3
D. 2
(தமிழ் - ஆங்கில அகராதிகளுள் வின்சுலோ அகராதிதான் 67000 சொற்களைக் கொண்ட பேரகராதியாய் விளங்குகிறது. இதில் விடுபட்டுப்போன பல சொற்கள், பொருள்களைப் போப்புப் பாதிரியார் தம்முடைய படியில் குறித்துவைத்திருந்தார் . இவருடைய அகராதிப்படியை அடிப்படையாக வைத்துப் பல்வேறு புதுச் சேர்க்கைகளுடன் அமைந்ததே தமிழ் லெக்சிகன் எனப்படும் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதி. தமிழில் வந்த மிகப் பெரிய இருமொழி அகராதி இதுவே. அறிஞர் பலர் கூடிப் பல்லாண்டுகள் உழைத்து உருவாக்கப்பெற்றுது இந்த அகரமுதலி. இதன் ஆறு தொகுதிகளையும், இணைப்புத் தொகுதியையும் பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்கள் பதிப்பித்து 1939-ல் முற்றுவித்தார்கள். இஃது உலகப் புகழ்பெற்ற ஒரு பேரகராதியாக இப்பொழுது விளங்கிவருகிறது
http://www.tamilvu.org/library/ldttam/html/ldttam09.htm)

10.  ' பள்ளிப் பறவைகள் ' யாருடைய நூல்?
A.பெருஞ்சித்திரனார் 
B.திரு . வி . க .
C.ந.மு.வேங்கடசாமி நாட்டார் 
D.சி . இலக்குவனார் 

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...