25 July, 2014

திருவிளையாடற்புராணம் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்



சொற்பொருள்:

  1.  வையை நாடவன் - பாண்டியன்
  2.  உய்ய - பிழைக்க
  3.  இரந்து செப்பினான் - பணிந்து வேண்டினான்.
  4.  தென்னவன் குலதெய்வம் - சொக்கநாதன் (அ)) சுந்தரபாண்டியன்
  5.  இன்னல் - துன்பம்
  6.  நல்கினார் - அளித்தார்
  7.  இறைஞ்சி - பணிந்து
  8.  அளக்கில் கேள்வியார் - அளவற்ற கேள்வியறிவினர்.
  9.  சிரம் துளக்கி - தலையசத்து
  10.  புறம்பு - வெளியில்
  11.  பையுள் - வருத்தம்
  12.  நம்பி - தருமி
  13.  கண்டம் - கழுத்து
  14.  வழுவு பாடல் - குற்றமுள்ள பாடல்
  15.  ஆர்அவை - (புலவர்) நிறைந்த அவை
  16.  சீரணி - புகழ்வாய்ந்த
  17.  வேணி - செஞ்சடை
  18.  மீனவன் - மீன்கொடியை உடைய பாண்டியன்
  19.  விபுதர் - புலவர்
  20.  பொற்கிழி - பொன் முடிப்பு
  21.  கிளத்தினேன் - சொன்னேன்
  22.  ஓரான் - உணரான்
  23.  அற்குற்ற - (அல்கு+ உற்ற) - இருளையொத்த
  24.  நாற்றம் - நறுமணம்
  25.  குழல் - கூந்தல்
  26.  அல்கு - இரவு
  27.  ஞானப்பூங்கோதை - உமையம்மை
  28.  உம்பரார் பதி - தேவர் தலைவன் (இந்திரன்)
  29.  கரந்தான் - மறைந்தான்
  30.  நாவலன் - புலவர்

இலக்கணக் குறிப்பு:

  1.  உரைத்து, இரந்து - வினையெச்சங்கள்
  2.  சொல்லி, இறைஞ்சி - வினையெச்சங்கள்
  3.  விளக்கி, சிறந்து - வினையெச்சங்கள்
  4.  மகிழ்ந்த - தொழிற்பெயர்
  5.  தூங்கிய, ஆயந்த - பெயரெச்சங்கள்
  6.  நேர்ந்த - வினையெச்சம்
  7.  கொண்டு, வைத்து - வினையெச்சங்கள்
  8.  நோக்கி - வினையெச்சம்
  9.  கிளத்தினேன் - தன்மை ஒருமை வினைமுற்று
  10.  தேராக்கீரன் - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  11.  புனைமலர் - வினைத்தொகை
  12.  பற்றுவான், அஞ்சான் - வினையாலணையும் பெயர்கள்
  13.  குற்றம் - தொழிற்பெயர்
  14.  விழுந்து - வினையெச்சம்
  15.  செந்நீ, வெம்மை - பண்புத்தொகை
  16.  தேய்ந்த, பாய்ந்த, ஆய்ந்த, காய்ந்த - பெயரெச்சங்கள்


 ஆசிரியர் குறிப்பு:

  •  நாகை மாவட்டத்திலுள்ள திருமறைக்காடு (வேதாரண்யம்) என்னும் ஊரில் பிறந்தார்.
  •  தமிழிலும், வடமொழியிலும் புலமை பெற்றவர்  மீனாட்சி சுந்தர தேசிகர்.
  •  பரஞ்சோதி முனிவர் துறவியாகச் சிவாலங்கள் தோறும் சென்று இறைவனை வழிபட்டு வந்தார்.
  •  மதுரை மீனாட்சி அம்மனையும் சோமசுந்தரக் கடவுளையும் வணங்கியவர். அந்நகரிலேயே சிலகாலம் தங்கியிருந்தார்.
  •  அந்நகரத்தார் கேட்டுக் கொண்டதற்கு இணைங்க திருவிளையாடற் புராணத்தை இயற்றினார். அந்நூலை சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென் மொழிப்புலவர் யாவரும் போற்ற அரங்கேற்றினார்.
  •  திருவிளையாடற் போற்றிக்கலி வெண்பா, மதுரைப்பதிற்றுப்பத்தந்தாதி முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார். 

நூற்குறிப்பு:

  •  திருவிளையாடற் புராணம், மதுரைக் காண்டம் (பதினெட்டுப் படலம்), கூடற்காண்டம் (முப்பது படலம்), திருவாலவாய்க் காண்டம் (பதினாறு படலம்) என்னும் முப்பெரும் பகுதிகளையும் படலம் என்னும் அறுபத்து நான்கு உட்பிரிவுகளையும் உடையது.
  •  இதில் மூவாயிரத்து முந்நூற்று அறுபத்தி மூன்று விருத்தப் பாக்கள் உள்ளன.
  •  மதுரையில் இறைவன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இப்படலங்கள் விளங்குகின்றன.
  •  இந்நூல், இறைவனின் திருவிளையாடல்களை விளக்கி எழுந்த நூல்களுல் விரிவானதும் சிறப்பானதும் ஆகும்.
  •  தொடைநயம் பக்திச்சுவை மிக்க இந்நூலுக்கு ந.மு. வேங்கடசாமி உரையெழுதியுள்ளார்.
  •  உடல் முழுவதும் கண்களை உடையவர் - சிவபெருமான்
  •  பொற்கிழி பெறச்சென்ற தருமியைத் தடுத்தவர் - நக்கீரனர்
  •  இறைவனிடம் பாடலைப் பெற்றுச் சென்றவர் - தருமி
  •  தமிழ்ப்புலவர்கள் இறைவனுக்கும் தமிழுக்கும் உள்ள பிணைப்பை உறுதிப்படுத்தவே திருவிளையாடல் புராணம் முதலிய புராணங்களை இயற்றியதாகக் கொள்ளலாம்.
  •  புலவர் தம் புலமைத் திறத்தை அறிய இறைவனை வேண்டிச் சங்கப் பலகையைப் பெற்றனர்.

 

நார்வே முன்னாள் பிரதமருக்கு "டாங்' விருது



நோபல் பரிசு போல, மிகப்பெரும் பரிசுத் தொகையுடன் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் "டாங்' பரிசு, முதல்முறையாக நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் க்ரோ ஹார்லெம் பிரண்ட்லாந்துக்கு (Gro harlem Brundtland) வழங்கப்படவுள்ளது.
"நிலையான வளர்ச்சி'க்கான பிரிவில் அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நிலையான வளர்ச்சி தவிர, உயிரி மருத்துவ அறிவியல், சீனா பற்றிய ஆய்வு, சட்டத்தின் ஆட்சி ஆகிய முன்று பிரிவுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
தைவான் நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான சாமுவேல் யின் அளித்த ரூ.60 கோடி நன்கொடையைக் கொண்டு, சீனாவின் "டாங்' வம்சத்தின் பெயரில் 2012-ஆம் ஆண்டு இந்தப் பரிசு தோற்றுவிக்கப்பட்டது.

இன்றைய கேள்விகள் - 25/07/2014

1."மிகினும் குறையினும் நோய் செய்யும்"–
என்று வள்ளுவர் குறிப்பிடுவது
  1. அறம்,பொருள்,இன்பம்
  2. வளி,சூடு , குளிர்ச்சி
  3. அறியாமை , பேதைமை ,மடைமை
  4. புளி , உப்பு , காரம்


2.ஞான பச்சிலை எனப் போற்றப்படும்
மூலிகை
  1. துளசி
  2. கீழாநெல்லி
  3. தூதுவளை
  4. கற்றாழை


3.பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை
நீக்குவதால் இதற்கு குமரி என்ற பெயருண்டு
அம்மூலிகை எது ?
  1. குப்பைமேனி
  2. கற்றாழை
  3. வல்லாரை
  4. துளசி

4.பொருத்துக
துளசி         - அ) மலப்புழுக்கள் வெளியேறும்
கீழாநெல்லி   - ஆ) இளைப்பு இருமல் போக்கும்
தூதுவளை    - இ) மஞ்சட்காமாலை நீங்கும்
குப்பைமேனி  - ஈ) தலைவலி நீங்கும்

  1. 1- ,2-    , 3-    ,4-
  2. 1- ,2-    , 3-    ,4-
  3. 1- ,2-    , 3-    ,4-
  4. 1- ,2-    , 3-    ,4-


5.சரஸ்வதி எனும் பெயர் கொண்ட மூலிகை
  1. துளசி
  2. வல்லாரை
  3. கீழாநெல்லி
  4. குப்பைமேனி 


விடைகள் 
1. வளி,சூடு , குளிர்ச்சி
2.தூதுவளை
3.கற்றாழை
4.1- ,2-    , 3-    ,4-
5.வல்லாரை



ஓய்வும் பயனும் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்




இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...