25 July, 2014

நார்வே முன்னாள் பிரதமருக்கு "டாங்' விருது



நோபல் பரிசு போல, மிகப்பெரும் பரிசுத் தொகையுடன் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும் "டாங்' பரிசு, முதல்முறையாக நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் க்ரோ ஹார்லெம் பிரண்ட்லாந்துக்கு (Gro harlem Brundtland) வழங்கப்படவுள்ளது.
"நிலையான வளர்ச்சி'க்கான பிரிவில் அவருக்கு இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.நிலையான வளர்ச்சி தவிர, உயிரி மருத்துவ அறிவியல், சீனா பற்றிய ஆய்வு, சட்டத்தின் ஆட்சி ஆகிய முன்று பிரிவுகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
தைவான் நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான சாமுவேல் யின் அளித்த ரூ.60 கோடி நன்கொடையைக் கொண்டு, சீனாவின் "டாங்' வம்சத்தின் பெயரில் 2012-ஆம் ஆண்டு இந்தப் பரிசு தோற்றுவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...