- சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது.
- சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.
- இந்நூல் தமிழில்எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
- இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது.
- இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.
- கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்
- ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர்
- இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோஅடிகள் என்பவராவார்.
- இவர் புகழ் பெற்ற சேரமன்னன்செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
- அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்.
- இவர் கி. பி 2 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன்கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை )எனக் கூறியுள்ளார்.
- கயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு எனஇலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை, வெறும்
புகழ்ச்சியில்லை;,
என்று பாரதியார் கூறுகிறார்
- சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
- நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது
- இது உரையிடப்பட்ட பாட்டுடை செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.
இக்காப்பியத்தில் பதிகம் என்ற பகுதியில்
சிலப்பதிகாரம் கூறும் செய்திகள்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர்
ஏத்துவர்,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்
காண்டங்கள்
- புகார் காண்டம்
- மதுரை காண்டம்
- வஞ்சிக் காண்டம்
புகார் காண்டம்
இது 10 காதைகளைக் கொண்டது.அவையாவன
- மங்கல வாழ்த்துப் பாடல்
- மனையறம் படுத்த காதை.
- அரங்கேற்று காதை.
- அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
- இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
- கடல் ஆடு காதை.
- கானல் வரி
- வேனிற்காதை
- கனாத் திறம் உரைத்த காதை.
- நாடு காண் காதை
மதுரை காண்டம்
இது 13 காதைகளைக் கொண்டது. அவை,
- காடு காண் காதை,
- வேட்டுவ வரி,
- புறஞ்சேரி இறுத்த காதை,
- ஊர் காண் காதை,
- அடைகலக் காதை,
- கொலைக்களக் காதை,
- ஆய்ச்சியர் குரவை,
- துன்ப மாலை,
- ஊர் சூழ் வரி,
- வழக்குரை காதை,
- வஞ்சின மாலை,
- அழற்படுகாதை,
- கட்டுரை காதை
வஞ்சிக் காண்டம்
1.குன்றக் குரவை
2.காட்சிக் காதை
3.கால்கோள் காதை.
4.நீர்ப்படைக் காதை
5.நடுநற் காதை.
6.வாழ்த்துக் காதை.
7.வரம் தரு காதை.