03 December, 2014

இன்றைய கேள்விகள் - 03/12/14

1." உரைவீச்சு" என்ற புதிய இலக்கிய வடிவ ஆக்க முயற்சிக்குப்
 பெருந்தொண்டு புரிந்த தமிழறிஞர் 
A.வ . செ . குழந்தைசாமி 
B.சாலை இளந்திரையன் 
C.அப்துல் ரகுமான் 
D.ஈரோடு தமிழன்பன் 

2." மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா " என்று 
சொன்ன சித்தர் 
A.அகத்தியர் 
B.பட்டினத்தார் 
C.சிவவாக்கியர் 
D.கடுவெளிச்சித்தர் 

3." நாடக மேடை நினைவுகள் " என்ற நூலின் ஆசிரியர் ?
A.கந்தசாமி 
B.சங்கரதாஸ் சுவாமிகள் 
C.டி கே சண்முகம் 
D.பம்மல் சம்பந்தனார் 

4.கம்பர் தம் இராமாயணத்தை அரங்கேற்றிய இடம் ?
A.தஞ்சாவூர் 
B.உறையூர் 
C.திருவரங்கம் 
D.நாட்டரசன் கோட்டை 

5.அகர வரிசையில் அமைந்ததைத் தேர்ந்தெடு 
A.ஒரு நாளும் ,இருக்க ,வேண்டாம் , ஓதாமல்
B.ஓதாமல், ஒரு நாளும் ,வேண்டாம் , இருக்க ,
C.ஓதாமல், ஒரு நாளும் , இருக்க , வேண்டாம் ,
D.இருக்க , வேண்டாம் ,ஒரு நாளும் , ஓதாமல்

6. தவறான ஒன்றைக் கண்டறி 
A.உமிழ்நீர் கலக்காத உணவின் சத்து உடலில் சேராது 
B.நோய்க்கு முதற்காரணம் உப்பு ஆகும் 
C.பெருங்காயம் தொண்டைக்கட்டு நீக்கும் .
D.நாளொன்றுக்குக் குறைந்தது  மூன்று லிட்டர் தண்ணீர் 
குடிக்க வேண்டும் 

7. எதிர்ச்சொல்லைக் காண் : மங்குதல் 
A.வளர்த்தல் 
B.மங்காமை
C.ஒளிர்தல் 
D.தயங்குதல் 

8. மனோன்மணியம் என்ற கவிதை நாடகத்தில் வரும் 
எதிர்த்தலைவன் 
A.குடிலன் 
B.புருசோத்தமன் 
C.கருணாகரன் 
D.நகுலன் 

9. சித்தர்களில் ஒருவரான " பட்டினத்தாரின் " இயற்பெயர் 
A.திருவெண்காடர் 
B.சிவநேச செட்டியார் 
C.பத்ரகிரியார் 
D.சுவேதாரண்யர்

10. நாட்குறிப்பு வேந்தர் எனப் போற்றப்படும் ஆனந்தரங்கம் 
பிள்ளை மீது பிள்ளைத்தமிழ் பாடியவர் 
A.தியாகராச தேசிகர் 
B.அரிமதி தென்னகன் 
C.சீனிவாசக்கவி 
D.கஸ்தூரிரங்கன் 

தமிழர் வானியல் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

வானியல் அறிவு:


  •  உலகம், ஐம்பூதங்களாகிய நிலம், நீர், வெப்பம், காற்று, வானம் ஆகிய ஐந்தும் உள்ளடக்கியது எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.

 நிலம் நீர் தீ வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் ஆதலின்
- தொல்காப்பியம்

இதுபோன்று புறநானூற்று பாடலும் கூறுகிறது.

மண்திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலை இய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும்பூத்தது இயற்கை போல்

உலகம் தட்டையா? உருண்டையா?

  •  பதினைந்தாம் நூற்றாண்டில் போலந்து நாட்டை சேர்ந்த நிக்கோலஸ் கோபர்நிகஸ் என்பவர் உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று கூறினார். ஆனைல் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை.



  •  பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கலீலியோ, உலகம் உருண்டையானது என்பதை தம் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து சொன்னார்.

 ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் தம்குரலில் கூறியுள்ளார்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

ஞாயிற்றுக் காட்சி:

  •  வான்வெளியில் மிகப்பெரிய விண்மீன் ஞாயிறு.
  •  சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றும்" என்று போற்றியுள்ளார்.
  •  ஞாயிற்றைச் சுற்றிய பாதையை "ஞாயிறு வட்டம்" என்றனர் பழந்தமிழர் எனப் புறநானூறு கூறுகிறது.

 செஞ்ஞாயிற்றுச் செலவும் அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் - புறம் , 30

திங்கள் தோற்றம்:

  •  தானே ஒளிவிடக்கூடிய ஞாயிற்றை "நாள்மீன்" என்றும், ஞாயிற்றிடமிருந்து ஒளி பெற்று ஒளிவிடக்கூடியவற்றை "கோள்மீன்" என்றும் அழைப்பர்.
  •  திங்கள் தானே ஒளி வீசுவதில்லை, எனபதை திருவள்ளுவர் வெளிப்படுத்துகிறார்.

 மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் 
காதலை வாழி மதி.

  •  திங்களை பாம்பு கொண்டற்று என்னும் குறள் "திங்கள் மறைப்பு" (சந்திரகிரகணம்) பற்றியதாகும்.

கோள்கள் பற்றிய தமிழரின் கருத்து:

  •  கோள்களின் நிறம், வடிவம் முதலியவற்றையும் அறிந்திருந்தனர்.
  •  செந்நிறமாய் இருந்த கோளைச் செவ்வாய் என்றனர்.
  •  வெண்மை நிறமுடைய கோளை வெள்ளி என்றனர்.
  •  வெள்ளிக்கோளுக்கு ஒரு சிறப்பு உண்டு. ஞாயிறு உதயத்திற்கு முன்பே வெள்ளி எழுந்து விடியலை உணர்த்துவதால் இதனை "விடிவெள்ளி" என்றனர்.
  •  புதிதாகக் கண்டறிந்த கோளை புதன் என அழைத்தனர். புதிதாக அறிந்ததால் அதற்கு "அறிவன்" என்றும் பெயருண்டு.
  •  வியா என்றால் பெரிய, நிறைந்த எனப் பொருள்படும். வானில் பெரிய கோலாக வளம் வருவதையே வியாழன் என்றனர்.
  •  சனிக்கோளைக் "காரிக்கோள்" என்றழைத்தனர். இக்கோளில் கந்தகம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது.

தூமகேது:


  •  தூமகேதுவை வால்நட்சத்திரம் என்றும் கூறுவர்.
  •  தமிழ் இலக்கியங்களில் தூமகேது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...