09 August, 2014

வேலுநாச்சியார் - சமச்சீர் பாடம்

வேலுநாச்சியார்
  • ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  • சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வேலுநாச்சியாரை மணந்து கொண்டார்
  • 1772 இல் ஆங்கிலேயருக்கும் முத்துவடுகனாதருக்கும் நடந்த போரில் முத்துவடுகநாதர்வீர மரணமடைந்தார்
  • வேலுநாச்சியார் மைசூர் மன்னர் ஐதர் அலியை சந்தித்து ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்து பேசினார்
  • ஐதர் அலி அவருக்கு படைவீரர்களை அனுப்பி உதவினார்
  • 1780ஆம் ஆண்டு மருது சகோதரர்களுடன் இணைந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு சிவகங்கையை கைப்பற்றினார் 


அசலாம்பிகை அம்மையார் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

அசலாம்பிகை அம்மையார் 
  • அசலாம்பிகை அம்மையார் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டனை என்ற ஊரில் பிறந்தார் .
  • அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர்
  • திரு வி க இவரை இக்கால ஔவையார் என்று பாராட்டுகிறார்

இயற்றிய நூல்கள்
  • ஆத்திசூடி வெண்பா
  • இராமலிங்க சுவாமிகள் வரலாற்றுப் பாடல்(409 பாடல்கள் )
  • குழந்தை சுவாமிகள் பதிகம்
  • திருவாமாத்தூர்ப் புராணம்
  • திருவுடையூர்  தலபுராணம்
  • காந்தி புராணம்(2034 பாடல்கள் )
  • திலகர் புராணம்

Tnpsc Aptitude 014

இன்றைய கேள்விகள் - 09/08/2014

1.சம்பு – பொருள் தருக
  1. கொய்யா
  2. வேம்பு
  3. நாவல்
  4. வாழை
2.திலகர் புராணம் என்ற நூலை இயற்றியவர்
  1. அசலாம்பிகை அம்மையார்
  2. நாமக்கல் கவிஞர்
  3. திரு வி க
  4. பாரதிதாசன்
அசலாம்பிகை அம்மையார்   இயற்றிய வேறு நூல்கள் ஆத்திசூடி வெண்பா ,குழந்தை சுவாமிகள் பதிகம், இராமலிங்க சுவாமிகள் சரிதம் , காந்தி புராணம்  )
3.அசலாம்பிகை அம்மையாரை இக்கால ஒளவையார் எனப்
பாராட்டியவர்
  1. பாரதியார்
  2. திரு வி க
  3. கவிமணி
  4. பாரதிதாசன்
4.தென்னாட்டின் ஜான்சி ராணி என்று அழைக்கப்பட்டவர்
  1. வேலுநாச்சியார்
  2. அஞ்சலையம்மாள்
  3. அம்புஜத்தம்மாள்
  4. வை மு கோதைநாயகி

5.பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே – என்று பாடியவர்
  1. பாரதியார்  
  2. பாவேந்தர் பாரதிதாசன்
  3. முடியரசன்
  4. கவிக்கோ அப்துல் ரகுமான்
6.ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய முதல் பெண்மணி
  1. அம்புஜத்தம்மாள்
  2.  வேலுநாச்சியார்
  3. வை மு கோதைநாயகி
  4. ருக்மணி லட்சுமிபதி

7.திருமந்திரத்தில் அமைந்துள்ள பாடல்களின் எண்ணிக்கை
  1. இரண்டாயிரம்
  2. ஆயிரம்
  3. மூன்றாயிரம்
  4. நான்காயிரம்
(இதற்கு தமிழ் மூவாயிரம் என்ற வேறு பெயரும் உண்டு )
8.முகை – பொருள் தருக
  1. முகம்
  2. செடி
  3. கண்
  4. மொட்டு
9.ஞானோபதேசம் என்ற நூலை இயற்றியவர்
  1. ஜி யு போப்
  2. வீரமாமுனிவர்
  3. ஆறுமுக நாவலர்
  4. உ வே சா
( இவர் இயற்றிய வேறு நூல்கள் – பரமார்த்த குரு கதைதிருக்காவலூர் கலம்பகம் தொன்னூல் விளக்கம் ,கித்தேரியம்மாள் அம்மானை)
10.மதங்க சூளாமணி என்னும் நூலை எழுதியவர்
  1. பம்மல் சம்மந்தனார்
  2. சுவாமி விபுலானந்தர்
  3. மறைமலையடிகள்
  4. பரிதிமாற்க்கலைஞர்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...