15 August, 2014

TNPSC General Tamil Questions -001

1.வழூஉச் சொல்லற்ற தொடர் எது ?
  1. வலது பக்கச் சுவரில் எழுதாதே
  2. வலப்பக்கச் சுவரில் எழுதாதே
  3. வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே
  4. வலது பக்கச் சுவற்றில் எழுதாதே


2.“கொம்பினை யொத்த மடப்பிடி” யார்?
  1. கண்ணகி
  2. சீதை
  3. திரௌபதி
  4. மாதவி


3.Ancient and Modern Tamil Poets என்னும் நூலின் ஆசிரியர் ?
  1. சி என் அண்ணாத்துரை
  2. வேதநாயகம் பிள்ளை
  3. மறைமலையடிகள்
  4. உ வே சாமிநாதையர்


4.“திருவாரூர் நான்மணிமாலை” என்னும் நூலில் இடம்பெறாத
 பாவகை
  1. வெண்பா
  2. ஆசிரியப்பா
  3. கட்டளைக் கலித்துறை
  4. வஞ்சிப்பா


5.பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்
  1. பராங்குசன்
  2. தமிழ்மாறன்
  3. தமிழ்வியாசர்
  4. சடகோபன்

6.பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை இம்மூலிகை
நீக்குவதால் இதற்கு குமரி என பெயருமுண்டு
  1. குப்பைமேனி
  2. துளசி
  3. கீழாநெல்லி
  4. கற்றாழை


7.“வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் “
என்று எடுத்துரைத்தவர்
  1. காந்தியடிகள்
  2. கல்யாணசுந்தரனார்
  3. முத்துராமலிங்கர்
  4. விவேகானந்தர்


8.பொருந்தாததைச் சுட்டு
  1. வாதம்
  2. ஏமம்
  3. பித்தம்
  4. சீதம்


9.தென்னவன் பிரமராயன் என்ற விருதிற்கு உரியவர்
  1. திருநாவுகரசர்
  2. சுந்தரர்
  3. மாணிக்கவாசகர்
  4. திருஞானசம்பந்தர்


10.முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – இவ்வாறு தமிழரின் நாகரிகப்
பண்பை சுட்டும் இலக்கியம்
  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. அகநானுறு 
விடைகள் 

  1. வலப்பக்கச் சுவரில் எழுதாதே
  2. திரௌபதி
  3. மறைமலையடிகள்
  4. வஞ்சிப்பா
  5. தமிழ்வியாசர்
  6. கற்றாழை
  7. முத்துராமலிங்கர்
  8. ஏமம்
  9. மாணிக்கவாசகர்
  10. நற்றிணை


இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...