தங்க நாற்கரச் சாலைத் திட்டம்
தங்கநாற்கரச் சாலைத் திட்டம் என்பது இந்தியாவின் நான்கு முக்கிய மாநகரங்களான டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகியவற்றை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளை நான்கு வழிப்பாதைகளாக மாற்றும் திட்டம் ஆகும். இத்திட்டம் 1998ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. மேற்கூறிய நான்கு நகரங்களையும் இணைக்கும் கோடு நாற்கரமாகக் காணப்படுவதால் இது தங்கநாற்கரச் சாலைத் திட்டம் எனப் பெயரிடப் பட்டது. தற்போது 90 சதவீதத்திற்கும் மேலாக பணிகள் நிறைவடைந்து விட்டன. இதன் மொத்த நீளம் 5,846 கிலோ மீட்டர்கள் ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை 47A (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 47A பொதுவாக என்எச் 47A என குறிப்பிடப்படுகிறது. வில்லிங்டன் தீவு மற்றும் கொச்சி நகரங்களை இணைக்கிறது. இதன் நீளம் 6 கிமீ (3.7 மை).இந்தியாவின் மிக நீளம் குறைந்த தேசிய நெடுஞ்சாலை ஆகும்
தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை NH7, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் வாரணாசியையும், தமிழ் நாட்டின் கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 2369 கிலோமீட்டர்கள் நீளமான இச்சாலை ஆறு மாநிலங்களூடாகச் செல்கிறது. இது இந்தியாவின் மிக நீண்ட தேசிய நெடுஞ்சாலை.இது வடக்கு தெற்கு விரைவு சாலையின் ஒரு பகுதியாக இருக்கிறது
எல்லையோர சாலை(BRO) அமைப்பால் உலகத்திலேயே உயரமான இடத்தில் (4270மீ)மனாலியையும் காஷ்மீரிலுள்ள லே என்ற இடத்தையும் இணைத்துள்ளது .