27 July, 2014

20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி



20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்திய நேரப்படி ஜூலை24, வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சி, வண்ணமிகு வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.

ஒலிம்பிக்கில் கோலோச்சியவரான ஸ்காட்லாந்து சைக்கிள் வீரர் சர் கிறிஸ் ஹாய், காமன்வெல்த் கோலை (குயின் பேட்டன்) பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஒப்படைக்க, காமன்வெல்த் செய்தியை வாசித்த ராணி, பின்னர் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “20-வது காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்” என குறிப்பிட்டார்.

71 நாடுகளைச் சேர்ந்த 4,929 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களின் இசை நிகழ்ச்சி, சச்சின் டெண்டுல்கரின் சிறிய வீடியோ காட்சி ஆகியவை இந்தியாவின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதரான சச்சின், வீடியோவில் தோன்றி உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். 35 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட செல்டிக் பார்க், பாலிவுட் பிரபலங்களின் இசை நிகழ்ச்சியால் அதிர்ந்தது.
போட்டியில் பங்கேற்கும் 71 நாடுகளின் கொடி அணி வகுப்பு சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல, அவர் பின்னால் சக வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர். 

டி.எஃப்.ஏ.-(TFA-Trade Facilitation Agreement) ஏற்க முடியாது - இந்தியா



ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்வரை, உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ-WTO) வர்த்தக வசதியேற்படுத்தும் ஒப்பந்தத்தை (டி.எஃப்.ஏ.-TF (Trade Facilitation) Agreement) ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 2 நாள் பொதுக் குழுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகளிடையே தாராள வர்த்தகத்தை ஊக்குவிக்கும் புதிய நெறிமுறைகள் அடங்கிய வர்த்தக வசதியேற்படுத்தும் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் பங்கேற்ற டபிள்யூடிஓ அமைப்புக்கான இந்தியத் தூதர் அஞ்சலி பிரசாத் வெள்ளிக்கிழமை பேசியதாவது: 'ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கும், ஏழை நாடுகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இதர பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு தீர்வு காணப்படும்வரை, டி.எஃப்.ஏ. ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க முடியாது. பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை, டி.எஃப்.ஏ. ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதையும் ஒத்திவைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதனையேற்று, டி.எஃப்.ஏ. ஒப்பந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்கள் கருத்தை அறிய புதிய இணையதளம் "மை கவ்'



அரசு நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும்,

ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் "மை கவ்' (http://mygov.nic.in/

என்ற புதிய இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி

தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

  1. கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல்,
  2. பெண் குழந்தைகளுக்கான கல்வி
  3. சுத்தமான இந்தியா,
  4. திறன் மிக்க இந்தியா,
  5. வேலைவாய்ப்பு மற்றும் 
  6. கணினிமயமாக்கப்பட்ட இந்தியா 
என ஆறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க அந்த 


இணையதளத்தில் தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.



வைட்டமின் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் - சமச்சீர் அறிவியல்



Tnpsc Aptitude 003

கேள்வி - திருக்குறள் - 9 ஆம் வகுப்பு சமச்சீர்






இன்றைய கேள்விகள் - 27/07/2014

1.திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலை இயற்றியவர்
  1. நல்லாதனார்
  2. காரியாசான்
  3. கணிதமேதாவியார்
  4. ஔவையார்


2.என்றுமுள தென் தமிழ் என்றவர்
  1. கம்பர்
  2. திருவள்ளுவர்
  3. இளங்கோவடிகள்
  4. கணியன் பூங்குன்றனார்


3.திராவிட சாஸ்திரி என்ற சிறப்புப் பட்டத்தை
பரிதிமாற்கலைஞருக்கு வழங்கியவர்
  1. வில்லியம் மில்லர்
  2. ஜி யு போப்
  3. சி வை தாமோதரனார்
  4. இராகவனார்


4.நெடுநாவாய் – இலக்கணக் குறிப்பு
  1. பண்புத்தொகை
  2. உரிச்சொற்றொடர்
  3. வினைத்தொகை
  4. நான்காம் வேற்றுமைத்தொகை




  • விடைகள் 

    1. கணிதமேதாவியார் 
    2. கம்பர்
    3. சி வை தாமோதரனார்
    4. பண்புத்தொகை

    இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

    தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...