16 July, 2014

பெரியபுராணம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்




சொற்பொருள்:
  1. காய்ந்தார் நீக்கினார்
  2. மனை வீடு
  3. பசு
  4. மேதி எருமை
  5. நிறைகோல் துலாக்கோல்(தராசு)
  6. தடம் தடாகம்
  7. மந்தமாருதசீதம் குளிர்ந்த காற்றுடன் கூடிய நீர்
  8. சந்தம் அழகு
  9. ஈறு எல்லை
  10. கல்மிதப்பு கல்லாகிய தெப்பம்
  11. புவனம் உலகம்
  12. சூலை கொடிய வயிற்றுநோய்
  13. தெருளும் தெளிவில்லாத
  14. கரம் கை
  15. கமலம் தாமரை
  16. மிசை மேல்
  17. திருநீற்றுக்காப்பு திருநீறு
  18. நேர்ந்தார் இசைந்தார்
  19. பொற்குருத்து இளமையான வாழைக்குருத்து
  20. ஒல்லை விரைவு
  21. மல்லல் வளமான
  22. ஆம் அழகிய
  23. வால் கூரிய
  24. அரா பாம்பு
  25. அல்லல் துன்பம்
  26. அங்கை உள்ளங்கை
  27. உதிரம் குருதி
  28. மேனி உடல்
  29. மறைநூல் நான்மறை
  30. சேய் குழந்தை
  31. பூதி திருநீறு
  32. மெய் உண்மை
  33. பணிவிடம் பாம்பின் நஞ்சு
  34. சவம் பிணம்
  35. தண்ணளித்தாய் - குளிர்ச்சி நிறைந்த
  36. அழுங்கி - மிக வருந்தி
  37. வீந்தான் - இறந்தான்
  38. அங்கணர் - அழகிய நெற்றிக்கண்ணையுடைய சிவன்
  39. பொறாது - ஏற்காது
  40. பாற்றுவித்தார் – போக்குவித்தார்


இலக்கணக்குறிப்பு:
  1. செலவொழியா வலி ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  2. வழிக்கரை ஆறாம் வேற்றுமைத்தொகை
  3. உறுவேனில் உரிச்சொற்றொடர்
  4. நீர்த்தடம் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  5. பந்தர் கடைப்போலி
  6. அணைந்த வாகீசர் பெயரெச்சம்
  7. பொங்குகடல் வினைத்தொகை
  8. பெருமையறிந்து இரண்டாம் வேற்றுமைத் தொகை
  9. அறிந்து, அடைந்து வினையெச்சம்
  10. கரகமலம் உருவகம்
  11. பொழிந்திழிய வினையெச்சம்
  12. தேசம் இடவாகு பெயர்
  13. வந்தவர் வினையாலணையும் பெயர்
  14. நற்கரிகள், இன்னமுதம் பண்புத்தொகை
  15. தாய்தந்தை உம்மைத்தொகை
  16. மல்லலம் குருத்து உரிச்சொற்றொடர்
  17. தீண்டிற்று ஒன்றன்பால் வினைமுற்று
  18. துளங்குதல் தொழிற்பெயர்
  19. பூதி சாத்த இரண்டாம் வேற்றுமைத்தொகை
  20. அங்கணர் அன்மொழித்தொகை
  21. நோக்கி வினையெச்சம்
  22. எழுந்து, சென்று வினையெச்சம்
  23. பணிவிடம் ஆறாம் வேற்றுமைத்தொகை
  24. கேளா செய்யா என்னும் வாய்ப்பாடு வினையெச்சம்

பிரித்தறிதல்:
  1. செலவொழியா = செலவு + ஒழியா
  2. வழிக்கரை = வழி + கரை
  3. வந்தணைந்த = வந்து + அணைந்த
  4. எம்மருங்கும் = எ + மருங்கும்
  5. எங்குரைவீர் = எங்கு + உறைவீர்
  6. கண்ணருவி = கண் + அருவி
  7. உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
  8. திருவமுது = திரு + அமுது
  9. மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
  10. நற்கரிகள் = நன்மை + கறிகள்
  11. இன்னமுது = இனிமை + அமுது
  12. வாளரா = வாள் + அரா
  13. அங்கை = அம் + கை
  14. நான்மறை = நான்கு + மறை
  15. விதிர்ப்புற்றஞ்சி - விதிர்ப்பு + உற்று + அஞ்சி
  16. பாவிசை = பா + இசை
ஆசிரியர் குறிப்பு:

  • பெரியபுராணத்தை அருளியவர் சேக்கிழார்.
  • இவர் தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் பிறந்தவர்.
  • இவரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர்.
  • இவர் அநபாயச்சோழனிடம் தலைமை அமைச்சராய்த் திகழ்ந்தவர்.
  • இவர் உத்தமசோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்.
  • இவரைத் தெய்வச் சேக்கிழார் என்றும் தொண்டர்சீர் பரவுவார் என்றும் போற்றுவர்.
  • இவரின் காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:

  • தனியடியார் அறுபத்துமூவரும், தொகையடியார் ஒன்பதின்மரும் ஆக எழுபத்திருவர் சிவனடியார் ஆவர்.
  • அவ்வடியார்களின் வரலாற்றைக் கூறுவதால், பெருமை பெற்ற புராணம் என்னும் பொருளில் பெரியபுராணம்என்னும் பெயர் பெற்றது.
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம்என்பதாகும்.
  • தில்லை நடராசப்பெருமான், “உலகெலாம்என்று அடியெடுத்த்துக் கொடுக்கப் பாடப்பெற்றதெனவும் கூறுவர்.
  • மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார், “பக்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவஎனச் சேக்கிழார் பெருமானைப் புகழ்கிறார்.
  • உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காயந்தான், “பெரியபுராணம்என்பார் திரு.வி.க.

பெரியபுராணம் முதல் காண்டம், இரண்டாம் காண்டமென இரு

காண்டமாகவும், முதல் காண்டத்தில் ஐந்து சருக்கங்களையும், இரண்டாம்

காண்டத்தில் எட்டுசருக்கங்களையும் உடையதாக அமைக்கப்பெற்றுள்ளது. 

சுந்தரமூர்த்தி சுவாமிகளின்திருத்தொண்டத் தொகையில் இடம்பெற்றுள்ள 

பாடல்களின் முதல் வரியே சருக்கங்களின்  பெயர்களாக உள்ளது.

காப்பிய கதையானது கயிலாயத்தில் தொடங்கப்பெற்று, சைவ 

அடியார்களின் வாழ்க்கையை விவரித்து, இறுதியாக கயிலாயத்தில் 

முடிகிறது.

நான்காயிரத்து இருநூற்று என்பத்து ஆறு (4286) செய்யுள்களைக் கொண்ட

இப்புராணத்தில் ஆளுடையபிள்ளை எனப்படும் திருஞானசம்பந்தரின் 

வரலாறு மட்டும் 1256 செய்யுட்களால் விரிவாகக் கூறப்பட்டுள்ளதால் 

"பிள்ளை பாதி; புராணம் பாதி" என்கிற பழமொழி ஏற்பட்டது.

இணையான தமிழ் பழமொழி - V


இணையான தமிழ் பழமொழி - IV


இணையான தமிழ் பழமொழி - III


இணையான தமிழ் பழமொழி - II


இணையான தமிழ் பழமொழி - I


கலைச்சொற்கள்















































கம்பராமாயணம் 10 - வகுப்பு



சொற்பொருள்:
  1. ஆயகாலை அந்த நேரத்தில்
  2. அம்பி படகு
  3. நாயகன் தலைவன்
  4. நாமம் பெயர்
  5. துறை - தோணித்துறை
  6. தொன்மை - தொன்றுதொட்டு
  7. கல் மலை
  8. திரள் திரட்சி
  9. காயும் வில்லினன் - பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்
  10. துடி பறை
  11. அல் இருள்
  12. சிருங்கிபேரம் கங்கைகரையோர நகரம்
  13. திரை அலை
  14. உபகாரத்தன் - பயன்கருதாது உதவுபவன்
  15. கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்
  16. குறுகி - நெறுங்கி
  17. இறைஞ்சி - வணங்கி
  18. சேவிக்க - வணங்க
  19. மருங்கு பக்கம்
  20. நாவாய் படகு
  21. நெடியவன் இராமன்
  22. குறுகினன் - வந்துள்ளான்
  23. இறை தலைவன்
  24. பண்ணவன் இலக்குவன்
  25. பரிவு இரக்கம்
  26. குஞ்சி தலைமுடி
  27. மேனி உடல்
  28. மாதவர் முனிவர்
  29. அருத்தியன் - அன்பு உடையவன்
  30. முறுவல் புன்னகை
  31. விளம்பல் கூறுதல்
  32. சீர்த்த - சிறந்த
  33. பவித்தரம் - தூய்மையானது
  34. இனிதன் - இனிமையானது
  35. உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது
  36. தழீஇய - கலந்த
  37. கார்குலாம் மேகக்கூட்டம்
  38. பார்குலாம் உலகம் முழுவதும்
  39. இன்னல் - துன்பம்
  40. ஈர்கிலா - எடுக்க இயலாத
  41. தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
  42. அடிமைசெய்குவேன் - பணிசெய்வேன்
  43. குரிசில் தலைவன்
  44. இருத்தி இருப்பாயாக
  45. நயனம் கண்கள்
  46. இந்து நிலவு
  47. நுதல் நெற்றி
  48. கடிது விரைவாக
  49. முடுகினன் - செலுத்தினன்
  50. முரிதிரை மடங்கிவிழும் அலை
  51. அமலன் குற்றமற்றவன்
  52. இடர் - துன்பம்
  53. அமலன் - குற்றமற்றவன்
  54. இளவல் தம்பி
  55. துன்பு - துன்பம்
  56. உன்னேல் - நினைக்காதே


இலக்கணக்  குறிப்பு 
  1. போர்க்குகன் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
  2. கல்திரள்தோள் உவமைத்தொகை
  3. நீர்முகில் இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
  4. இருந்தவள்ளல் பெயரெச்சம்
  5. வந்துஎய்தினான் வினையெச்சம்
  6. கூவா ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  7. குறுகி, சேவிக்க வினையெச்சம்
  8. கழல் தானியாகுபெயர்
  9. வந்தனென், தீர்கிலேன், செங்குவென் - தன்மை ஒருமை வினைமுற்று
  10. அழைத்தி முன்னிலை ஒருமை வினைமுற்று
  11. வருக வியங்கோள் வினைமுற்று
  12. பணிந்து, வளைத்து, புதைத்து வினையெச்சம்
  13. இருத்தி முன்னிலை ஒருமை வினைமுற்று
  14. தேனும் மீனும் எண்ணும்மை
  15. மாதவர் உரிச்சொற்றொடர்
  16. அமைந்த காதல் பெயரெச்சம்
  17. சீர்த்த - ஒன்றன்பால் வனைமுற்று
  18. தழீஇய சொல்லிசை அளபெடை
  19. கார்குலாம் ஆறாம் வேற்றுமைத்தொகை
  20. உணர்த்துவான் வினையாலணையும் பெயர்
  21. தீராக் காதலன் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  22. மலர்ந்த கண்ணன் பெயரெச்சம்
  23. இனிய நண்ப குறிப்புப் பெயரெச்சம்
  24. நெடுநாவாய் பண்புத்தொகை
  25. தாமரை நயனம் உவமைத்தொகை
  26. நனிகடிது உரிச்சொற்றொடர்
  27. நெடுநீர் பண்புத்தொகை
  28. என்னுயிர் ஆறாம் வேற்றுமைத்தொகை
  29. நன்னுதல் பண்புத்தொகை
  30. நின்கேள் நான்காம் வேற்றுமைத்தொகை

 பிரித்தறிதல் :

  • நெடுநாவாய் - நெடுமை + நாவாய்
  • நெடுநீர் - நெடுமை + நீர்

ஆசிரியர் குறிப்பு:

  • கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
  • இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
  • கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
  • கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
  • இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
  • காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
  • தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
  • கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
  • சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
  • கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
  • யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.

நூல்குறிப்பு:

  • வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
  • கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
  • கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
  • கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
  • காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
  • இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் தமிழுக்கு கதிஎன்பர்.
  • குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்





இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...