- ஆயகாலை – அந்த நேரத்தில்
- அம்பி – படகு
- நாயகன் – தலைவன்
- நாமம் – பெயர்
- துறை - தோணித்துறை
- தொன்மை - தொன்றுதொட்டு
- கல் – மலை
- திரள் – திரட்சி
- காயும் வில்லினன் - பகைவர்களை அழிக்கும் வில்லாற்றல் பெற்றவன்
- துடி – பறை
- அல் – இருள்
- சிருங்கிபேரம் – கங்கைகரையோர நகரம்
- திரை – அலை
- உபகாரத்தன் - பயன்கருதாது உதவுபவன்
- கூவா முன்னர் - அழைக்கும் முன்னர்
- குறுகி - நெறுங்கி
- இறைஞ்சி - வணங்கி
- சேவிக்க - வணங்க
- மருங்கு – பக்கம்
- நாவாய் – படகு
- நெடியவன் – இராமன்
- குறுகினன் - வந்துள்ளான்
- இறை – தலைவன்
- பண்ணவன் – இலக்குவன்
- பரிவு – இரக்கம்
- குஞ்சி – தலைமுடி
- மேனி – உடல்
- மாதவர் – முனிவர்
- அருத்தியன் - அன்பு உடையவன்
- முறுவல் – புன்னகை
- விளம்பல் – கூறுதல்
- சீர்த்த - சிறந்த
- பவித்தரம் - தூய்மையானது
- இனிதன் - இனிமையானது
- உண்டனெம் - உண்டோம் என்பதற்குச் சமமானது
- தழீஇய - கலந்த
- கார்குலாம் – மேகக்கூட்டம்
- பார்குலாம் – உலகம் முழுவதும்
- இன்னல் - துன்பம்
- ஈர்கிலா - எடுக்க இயலாத
- தீர்கிலேன் - நீங்கமாட்டேன்
- அடிமைசெய்குவேன் - பணிசெய்வேன்
- குரிசில் – தலைவன்
- இருத்தி – இருப்பாயாக
- நயனம் – கண்கள்
- இந்து – நிலவு
- நுதல் – நெற்றி
- கடிது – விரைவாக
- முடுகினன் - செலுத்தினன்
- முரிதிரை – மடங்கிவிழும் அலை
- அமலன் – குற்றமற்றவன்
- இடர் - துன்பம்
- அமலன் - குற்றமற்றவன்
- இளவல் – தம்பி
- துன்பு - துன்பம்
- உன்னேல் - நினைக்காதே
இலக்கணக் குறிப்பு
- போர்க்குகன் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கதொகை
- கல்திரள்தோள் – உவமைத்தொகை
- நீர்முகில் – இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை
- இருந்தவள்ளல் – பெயரெச்சம்
- வந்துஎய்தினான் – வினையெச்சம்
- கூவா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- குறுகி, சேவிக்க – வினையெச்சம்
- கழல் – தானியாகுபெயர்
- வந்தனென், தீர்கிலேன், செங்குவென் - தன்மை ஒருமை வினைமுற்று
- அழைத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
- வருக – வியங்கோள் வினைமுற்று
- பணிந்து, வளைத்து, புதைத்து – வினையெச்சம்
- இருத்தி – முன்னிலை ஒருமை வினைமுற்று
- தேனும் மீனும் – எண்ணும்மை
- மாதவர் – உரிச்சொற்றொடர்
- அமைந்த காதல் – பெயரெச்சம்
- சீர்த்த - ஒன்றன்பால் வனைமுற்று
- தழீஇய – சொல்லிசை அளபெடை
- கார்குலாம் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- உணர்த்துவான் – வினையாலணையும் பெயர்
- தீராக் காதலன் – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
- மலர்ந்த கண்ணன் – பெயரெச்சம்
- இனிய நண்ப – குறிப்புப் பெயரெச்சம்
- நெடுநாவாய் – பண்புத்தொகை
- தாமரை நயனம் – உவமைத்தொகை
- நனிகடிது – உரிச்சொற்றொடர்
- நெடுநீர் – பண்புத்தொகை
- என்னுயிர் – ஆறாம் வேற்றுமைத்தொகை
- நன்னுதல் – பண்புத்தொகை
- நின்கேள் – நான்காம் வேற்றுமைத்தொகை
- நெடுநாவாய் - நெடுமை + நாவாய்
- நெடுநீர் - நெடுமை + நீர்
ஆசிரியர் குறிப்பு:
- கம்பர் தேரழுந்தூரில் பிறந்தார்.
- இவ்வூர், நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது.
- கம்பரின் தந்தையர் ஆதித்தன்.
- கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர்.
- இவரைத் திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல் ஆதரித்தவர்.
- காலம் கி.பி.பன்னிரெண்டாம் நூற்றாண்டு.
- தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பரை ஆயிரம் பாடல்களுக்கு ஒரு பாடல் எனப் பாடிச் சிறப்பித்துள்ளார்.
- கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சிலை எழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம் ஆகிய கம்பர் இயற்றிய நூல்கள்.
- சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர் ஆகியோர் இவர் காலத்துப் புலவராவர்.
- கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தமென்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன், கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்கள் கம்பரின் பெருமையை அறியலாம்.
- “யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்” என்று பாரதியார் கம்பரைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
நூல்குறிப்பு:
- வான்மீகி முனிவர் வடமொழியில் எழுதிய இராமாயணத்தைத் தழுவிக் கம்பர் அதனைத் தமிழில் இயற்றினார்.
- கம்பர் இயற்றிய இராமாயணம் கம்பராமாயணம் எனப்பட்டது.
- கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு இராமாவதாரம் எனப் பெயரிட்டார்.
- கம்பராமாயணம் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என ஆறு காண்டங்களை உடையது.
- காண்டம் என்பது பெரும்பிரிவையும் படலம் என்பது அதன் உட்பிரிவையும் குறிக்கும்.
- இந்நூலின் சிறப்புக் கருதியும் திருக்குறளின் பெருமை கருதியும் இவ்விரு நூல்களையும் “தமிழுக்கு கதி” என்பர்.
- குகப்படலம் அயோத்தியா காண்டத்தில் ஏழாவது படலம் ஆகும். இதனை கங்கைப் படலம் எனவும் கூறுவர்
Good one to refer
ReplyDelete