14 August, 2014

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - 8 ஆம் வகுப்பு சமச்சீர்



சொற்பொருள்:
  1.  மதி அறிவு
  2.  அமுதகிரணம் –  குளிர்ச்சியான ஒளி
  3.  உதயம் –  கதிரவன்
  4.  மதுரம் இனிமை
  5.  நறவம் தேன்
  6.  கழுவு துகளர் –  குற்றமற்றவர்
  7.  சலதி கடல்
  8.  அலகு இல் - அளவில்லாத
  9.  புவனம் உலகம்
  10.  மதலை குழந்தை
  11.  பருதிபுரி –  கதிரவன் வழிபட்ட இடம்(வைதீஸ்வரன் கோவில்)

 
ஆசிரியர் குறிப்பு:
  •  பெயர் –  குமரகுருபரர்
  •  பெற்றோர் –  சண்முகசிகாமணிக் கவிராயர், சிவகாமி சுந்தரியம்மை
  •  ஊர் –  திருவைகுண்டம்
  •  இயற்றிய  நூல்கள் கந்தர்கலிவெண்பா, மதுரை  மீனாட்சி அம்மை  பிள்ளைத்தமிழ், மதுரைக்  கலம்பகம்,  சகலகலாவல்லி    மாலை,திருவாரூர் மும்மணிக்கோவை ,   நீதிநெறி  விளக்கம்  முதலியன.
  •  சிறப்பு –  தமிழ், வடமொழி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளில் புலமை  மிக்கவர். திருப்பணந்தாளிலும்காசியிலும் தம்பெயரால் மேடம்  நிறுவி உள்ளார்.
  •  இறப்பு –  காசியில் இறைவனது திருவடியடைந்தார் ..
  •  காலம் –  பதினேழாம் நூற்றாண்டு.
நூல் குறிப்பு:
  •   96 வகை  சிற்றிலக்கியங்களுள் ஒன்று பிள்ளைத்தமிழ்.
  •  இறைவனையோ  நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக்  கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெருவது    பிள்ளைத்தமிழ்.
  •  பத்து  பருவங்கள், பருவத்திற்கு பத்து பாடல் என நூறு பாடல்கள்  கொண்டது.
  •  இது ஆண்பாற்  பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என  இருவகைப்படும்.
  •  பத்து பருவங்களில்  காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம்,   வருகைஅம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற்  பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை .இறுதி மூன்று பருவங்களான  சிற்றில், சிறுபறை, சிறுதேர். ஆண்பாலுக்கும் அம்மானை,   கழங்கு(நீராடல்), ஊசல் ஆகிய மூன்றும் பெண்பாற்    பிள்ளைத்தமிழுக்கும் உரியன .
  •  புள்ளிருக்குவேளூரில்  (வைதீஸ்வரன் கோவில்) எழுந்தருளியுள்ள  முருகப்பெருமானின் பெயர்  முத்துக்குமாரசுவாமி.  அவர் மீது    பாடப்பட்டதால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் என பெயர்  பெற்றது

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...