22 July, 2014
இந்தியப் பெண்ணுக்கு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பிரிட்டன் விருது
பிறந்த குழந்தையின் செவித்திறனை கண்டறியும் கருவியை கண்டுபிடித்த இந்திய பெண்ணுக்கு சிறந்த கண்டுபிடிப்பாளருக்கான பிரிட்டனின் "ரோலக்ஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
பிறந்த குழந்தைகளின் கேட்கும் திறனில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க உதவும் கருவியை இந்தியாவைச் சேர்ந்த நீத்தி கைலாஸ் உருவாக்கியுள்ளார்.
இந்த கருவியானது குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய, எளிதில் உபயோகப்படுத்தக்கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
ரோலக்ஸ் விருதானது கடந்த 1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது மனித வாழ்க்கையை மேம்படுத்துதல் மற்றும் உலகின் இயற்கை வளத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்காக வழங்கப்படுகிறது.
இந்த விருதுடன் 33,000 பவுண்ட் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.34 லட்சம்) பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டுக்கான இந்த விருது நீத்தி கைலாஸ் தவிர மேலும் 4 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பூமியைப் போன்ற 3-வது கிரகம்
பூமியைப் போன்ற கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
"ஜிஜே 832 சி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம், பூமிக்கு 16 ஒளிவருட தூரத்தில், "ஜிஜே 832' என்ற சூரியனைப் போன்ற நட்சத்திரத்தை 16 நாள்களுக்கு ஒருமுறை சுற்றி வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கோள், பூமியைவிட ஐந்து மடங்கு பெரிதானது எனவும், "ஜிஜே 832' நட்சத்திரம், சூரியனில் பாதியளவு வெப்பத்தைக் கொண்டிருப்பதால், பூமிக்கு இணையான வெப்பநிலை அங்கு நிலவக்கூடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்
.
அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில், இதுவரை கிளைஸ் 667சி மற்றும் கெப்ளர்-62 ஆகிய இரண்டு கிரகங்கள் மட்டுமே பூமியைப் போன்று இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய கேள்விகள் - 22/07/14
மடக்கொடி என்பதன் இலக்கணக்குறிப்பு
- உம்மைத்தொகை
- பண்புத்தொகை
- அன்மொழித்தொகை
- தொழிற்பெயர்
தடக்கை என்பதன் இலக்கணக்குறிப்பு
- உருவகம்
- பண்பாகு பெயர்
- வினையெச்சம்
- உரிச்சொற்றொடர்
தழீஇய என்பதன் இலக்கணக்குறிப்பு
- சொல்லிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- ஈற்றுப்போலி
- இசைநிறை அளபெடை
விடைகள்
- அன்மொழித்தொகை
- உரிச்சொற்றொடர்
- சொல்லிசை அளபெடை
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...