12 November, 2014

19 ஆம் நூற்றாண்டில் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்கள் - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 










































ANSWERS
1----------A 
2----------C
3----------B
4----------B
5----------D
6----------A
7----------C
8----------A

திரைப்படக்கலை உருவான கதை - 10 ஆம் வகுப்பு சமச்சீர்

திரைப்படத்தின் சிறப்பு:
உலகில் பல்வேறு மொழிகள் இருப்பினும், மக்கள் அனைவரும் எளிதில் புரிந்துக்கொள்ளும் உலகமொழி திரைப்படம்.
அது உதடுகளால் பேசும் மொழியன்று; உள்ளத்தால் பேசி, உணர்ச்சிகளால் உருவாகும் மொழி.

திரைப்படத்தின் வரலாறு:
ஒளிப்படம் எடுக்கும் முறையை 1830ஆம் ஆண்டு கண்டுப்பிடித்த பின்னர், எட்வர்ட் மைபிரிட்சு என்ற ஆங்கிலேயர் முதலில் ஓடும் குதிரையை இயக்கப்படமாக எடுத்து வெற்றிபெற்றார்.

ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் உருவாக்கும் முறையைக் கண்டுபிடித்தார்.
எடிசன், ஒருவர் மட்டும் பார்க்கும் படக்கருவியைக் கண்டுபிடித்தார்.
பிரான்சிஸ் சென்கின்சு என்ற அமெரிக்கர் 1894இல் ரிச்மண்ட் என்னுமிடத்தில் இயக்கப்படத்தைப் பலரும் பார்க்கும் வகையில் வடிவமைத்தார். புதிய படவீழ்த்திகள் உருவாக, இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன.
திரைப்படம்:
நடிப்பாற்றலை எடுத்துக்கூறிச் சில நேரங்களில் தாமே நடித்தும், காட்சிகள் அமைத்தும் படம் முடியும்வரை உழைக்கும் நுண்மாண் நுழைபுலம் உடையாரை இயக்குனர் என்பர்.
கதைப்படங்கள் மட்டுமின்றிக் கருத்துப்படங்கள், செய்திப்படங்கள், விளக்கப்படங்கள், கல்விப்படங்கள் எனப் பல வளர்ச்சி நிலைகளைத் திரைப்படத்துறை அடைந்துள்ளது.
திரைப்படச்சுருள்:

திரைப்படம் எடுக்கப் பயன்படும் படச்சுருள் செல்லுலாய்டு என்னும் பொருளால் ஆனது.
படம் எடுக்கப் பயன்படும் சுருள், எதிர்ச்சுருள் எனப்படும்.
படம்பிடிக்கும் கருவி:

இது ஒளிப்பதிவு செய்யப் பயன்படுகிறது.
படப்பிடிப்புக்கருவியில் ஓரடி நீளமுள்ள படச்சுருள் 16 படங்கள் வீதம் ஒன்றன்பின்ஒன்றாகத் தொடர்ச்சியாக எடுக்கப்படும்.
ஒலிப்பதிவு:
நடிகர்களின் நடிப்பையும், பாடும் பாடல்களையும் உரையாடல்களையும் ஒலிப்பதிவு செய்வர்.
திரைப்படக்காட்சிப் பதிவு:

ஒளிஒலிப்படக்கருவி என்னும் கருவி திரையரங்குகளில் திரைப்படம் காட்டப்பயன்படுகிறது.
இக்கருவியில் மேற்பக்கம் ஒன்றும், அடிப்பக்கம் ஒன்றுமாக வட்டமான இரு பெட்டிகள் இருக்கும்.
கருத்துப்படம்:

கருத்துப்படம் அமைக்கத் தொடங்கியவர் வால்ட் டிஸ்னிஎன்பார் ஆவார்.
படங்களை எழுதுவதற்குப் பதிலாகப் பொம்மைகளைக் கொண்டும் படங்களைத் தயாரிக்கின்றனர்.
கலைச்சொற்களை அறிந்துகொள்வோம்
Persistence of vision -
பார்வை நிலைப்பு
Dubbing -
ஓலிச்சேர்க்கை
Director -
இயக்குநர்
Shooting -
படப்பிடிப்பு
artoon -
கருத்துப் படம்
Negative -
எதிர்ச்சுருள்
Camera -
படப்பிடிப்புக்கருவி
Trolly -
நகர்த்தும் வண்டி
Microphone -
நுண்ணொலிபெருக்கி
Projector -
படவீழ்த்தி
Lense -
உருப்பெருக்கி
Motion Pictures -
இயங்குருப் படங்கள்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...