28 November, 2014

இன்றைய கேள்விகள் - 28/11/14

1.அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர்
A.வடலூர்
B.இரட்டணை
C.திண்டிவனம்
D.செங்கல்பட்டு


2.காகிதத்தில் உருவங்கள் செய்யும் கலையை ஜப்பானியர் ________என்று கூறுவர்
A.ஓரிகாமி
B.காகிதக்கலை
C.குச்சிப்புடி
D.பேப்பர் ஆர்ட்


3.சமவெளி மரங்களில் வாழும் பறவைகள்----------------------
A.கொக்கு
B.இருவாச்சி
C.பனங்காடை
D.மரங்கொத்தி


4.தாராபாரதிஎழுதிய நூலில் இடம்பெறாத ஒன்று ?
A.புதிய விடியல்
B.
இது எங்கள் கிழக்கு
C.
தாராபாரதி கவிதைகள்
D.புதிய தமிழகம்



5.இளம் வயதில் முத்துராமலிங்க தேவருக்குக் கற்பித்த ஆசிரியர்
A.
வ.வே.சு
B.
உக்கிரபாண்டி தேவர்
C.
இந்திராணி அம்மையார்
D. குறைவற வாசித்தான் பிள்ளை



6.தனித்திரட்டு பாடலில் சிலேடை எழுதியவர்
A. இராமச்சந்திரக் கவிராயர்
B. உடுமலை நாராயணக்கவி
C. திரிகூட ராசப்பக் கவிராயர்
D. அழகிய சொக்கநாதப் புலவர்



7. ”ஈக்கால் துணையும் உதவாதார்”  என்று எழுதியவர்
A.சமணமுனிவர்
B.நல்லாதனார்
C.கணிதமேதாவியார்
D.கணியன் பூங்குன்றனார்


8.” மனைக்கு விளக்கம் மடவாள் “  என்று  கூறும் நூல்
A.திருக்குறள்
B.நான்மணிக்கடிகை
C.நாலடியார்
D.சிறுபஞ்சமூலம்


9.மருணீக்கியார் என்ற பெயரைக் கொண்டவர் 
A.சுந்தரர் 
B.மாணிக்கவாசகர் 
C.வாகீசர் 
D.குமரகுருபர் 


10.தொல்லியல் என்பது ஆங்கிலத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது 
A.ஆர்கியாலாஜி 
B.காஸ்மாலஜி
C.ஜியாலஜி
D.தியாலாஜி


11.காய்முன் நேர் வருவது -----------------------
A.வெண்சீர் வெண்டளை 
B.இயற்சீர் வெண்டளை 
C.கலித்தளை 
D.ஒன்றாத வஞ்சித்தளை

12.’கலைகளின் சரணாலயம் ‘ என்று அழைக்கப்படும் கோயில்
A. பிரகதீசுவரர் ஆலயம்
B. மாமல்லபுரம்
C. ஐராவதிசுவரர்
D. கங்கை கொண்ட சோழபுரம்

13.நிலத்தை குறிக்கும் சொல்
A.
புரம்
B. 
பட்டினம்
C.
குப்பம்
D.புலம்


14.துயின்றார் என்பதன் வேர்ச்சொல்
A.தூக்கம்
B.துயில்
C.துயின்ற
D.துயின்


15.”முத்தே பவளமே மொய்த்த பசும் பொற்சுடரே”- இப்பாடலை எழுதியவர்
A. இளங்கோவடிகள்
B. தாயுமானவர்
C. கம்பர்
D. இராமலிங்க அடிகளார்


அடிப்படை உரிமைகள் (Fundamental Rights)

• இது பகுதி 3ல் அமைந்துள்ளது.
• Art 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி குறிப்பிடுகிறது.
• இது நடைமுறைக்கு வரும் போது 7 அடிப்படை உரிமைகள் இருந்தன.
• 44வது சட்டத் திருத்தத்தின் மூலம் சொத்துரிமை 1978 ஆம் ஆண்டு அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
• தற்போது உள்ள அடிப்படை உரிமைகள் 6 அவை
• சமத்துவ உரிமை Art 14- 18
• சுதந்திர உரிமை Art 19- 22
• சுரண்டலுக்கு எதிரான உரிமை Art 23- 24
• சமய உரிமை Art 25- 28
• அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் Art 32

1. சமத்துவ உரிமை 
Art. 14 சட்டத்தின் முன் அனைவரும் சமம்
Art. 15 சாதி, சமய, இன, பால் (அ) பிறப்பு வேற்பாடு காட்ட தடை
Art. 16 அரசு வேலை வாய்ப்புகளில் சமவாய்ப்பு
Art. 16 (4) SC, ST -க்கு முன்னுரிமை
Art. 17 தீண்டாமை ஒழிப்பு
Art. 18 பட்டங்கள் ஒழிப்பு

2. சுதந்திர உரிமை (Art. 19- 22)
Art.19 இது 6 சுதந்திரங்களை வழங்கியுள்ளது.
1.பேச்சு (Freedom of Speech and expression)
2. ஒன்று கூடும் சுதந்திரம் (Freedom of Assembly)
3. சங்கம் அமைக்க (Freedom to form Association)
4. இந்தியா எங்கும் செல்ல (Freedom of Movement)
5. இந்தியா எங்கும் வசிக்க (Freedom of Residence & Settlement)
6. தொழில் செய்ய (Freedom of Profession, Occupation, Trade, Business)
Art. 20 – சட்ட விரோதமாக குற்றம் சமத்துவதிலிருந்து பாதுகாப்பு
Art.21 – தனி நபர் சுதந்திரம்
Art.21A – 6 முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி
Art. 22கைது செய்து காவலில் வைப்பதில் பாதுகாப்பு

3. சுரண்டலுக்கு எதிரான உரிமை (Art. 23 – 24)
Art.23 – சுரண்டலுக்கு எதிராகவும் கொத்தடிமை முறையை தடை செய்கிறது.
Art.24 – 14 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியில் அமர்த்த தடை

4. சமய உரிமை (Art.25-28) 
Art.25 – விரும்பிய மதத்தை தழுவ உரிமை
Art.26 – மத விஷயங்களை நிர்வகிக்க உரிமை
Art.27 – மத அடிப்படையிலான வரிகளை தடுத்தல்
Art.28 – குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட மதத்தைச்சார்ந்தவர்கள் கூட உரிமை

5. கல்வி, கலாச்சார உரிமை (Art.29 -30) 
Art.29 – சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாத்தல்
Art.30 – சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்த உரிமை
Art.31 – நீக்கப்பட்டது.

6. அரசியலமைப்புக்கு உட்பட்டு பரிகாரம் தேடும் உரிமை (Art 32)
இது இந்திய அரசியலமைப்பின் இதயமும் ஆன்மாவும் போன்றது  - டாக்டர் அம்பேத்கர் 
இது 5 நீதிப் பேரானைகளை வழங்குகிறது.
1. Writ of Habeas Corpus -ஆட்கொணர் நீதிப் பேராணை
2. Writ of Mandamus – கட்டளை நீதிப் பேராணை
3. Writ of Prohibition – தடை நீதிப் பேராணை
4. Writ of Quowarranto – உரிமையேது வினா நீதிப்பேராணை
5. Writ of Certiorari – ஆவணக் கேட்பு நீதிப் பேராணை

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...