வீரமாமுனிவர்(1680-1747)
- வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் பிறந்தார்.
- வீரமாமுனிவரின் இயற்பெயர் கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி தம் முப்பதாம் வயதில் தமிழகம் வந்தார்.
- தமிழின் மீது கொண்ட பற்றின் காரணமாக தன் பெயரை தைரியநாதன் என மாற்றிகொண்டார். பின்னர் தனித்தமிழுக்கு ஏற்ப வீரமாமுனிவர் என மாற்றம் பெற்றது.
- தமிழில் முதன்முதலாக சதுரகராதி என்னும் அகரமுதலியை படைத்தார்.
- கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம் எனப் போற்றப்படும் தேம்பாவணி என்னும் காப்பியத்தை படைத்தார்.
- தமிழ் எழுத்து வரிவடிவத்தை திருத்தி, எழுத்துச் சீர்திருத்தம் செய்தார்.
- குட்டித் தொல்காப்பியம் எனப் போற்றப்படும் தொன்னூல் விளக்கம் படைத்தார்.
- கலம்பகம், அம்மானை போன்ற சிற்றிலக்கிய வகை நூல்களையும், பரமார்த்த குரு கதை என்னும் நகைச்சுவை நூலையும் படைத்தார்.
- " தேம்பாவணி, காவலூர் கலம்பகம் கதம்ப மாலையாக காட்சி அளிக்கிறது. தொன்னூல் பொன்நூலாக இலங்குகின்றது. சதுரகராதி முத்தாரமாக மிளிர்கிறது. வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்" என ரா.பி.சேதுபிள்ளை பாராட்டுகிறார்
குணங்குடி மஸ்தான்(1788-1835)
- "மாதவஞ்ச்சேர் மேலோர் வழுத்தும் குணங்குடியான் "என்று அழைக்கப்படுபவர்.
- இயற்பெயர் - குணங்குடி மஸ்தான் சாகிபு.
- இளம்வயதிலே முற்றும் துறந்தவராய் வாழ்ந்தவர்.
- இவர் தாயுமானவர் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டார் .
- அவருடைய பராப்பரக்கண்ணிப் போலவே ஓசை நயம் மிக்க பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
- பராப்பரக்கண்ணி, எக்காலக்கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி முதலியன இவர் பாடிய சில கண்ணிகள்.
- இவர்தம் பாடல்கள், உலகின் உண்மை நிலையை உணர்த்தி அழியாப் பேரின்பப் பெருவாழ்விற்கு நம்மை அழைத்து செல்லும்.
- இவர் குருநிலை, தவநிலை, துறவுநிலை, நியமநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை எனப் பொருள்தரும் வகையில் பாடல்கள் பல இயற்றியுள்ளார்.
- இவர் மீது கொண்ட பற்றின் காரணமாக திருத்தணி சரவணப் பெருமாள் நான்மணிமாலை ஒன்று இயற்றியுள்ளார்.
- அந்நூலில் "மடல் சூல்புவியில உளத்திருளைக் கருணை ஒளியினாற் களைந்து, விடல்சூழ்பவரின் குணங்குடியான், மிக்கோன் எனற்கு ஓர் தடையுளதோ? எனக் கேட்கிறார்.
- "தடை உண்டு என உரைப்பார் தமிழுலகில் இல்லை "என்கிறார்.
ஆறுமுக நாவலர்(1822-1879)
- ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம் நல்லூரில் பிறந்தவர்.
- இவருடைய இயற் பெயர் ஆறுமுகனார்.
- இளமையிலே சைவ சிந்தாந்த சாத்திரங்கள் படித்தவர்.
- இவரின் சொற்பொழிவு திறமையை கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு நாவலர் பட்டம் வழங்கினார்.
- இவர் சிறந்த பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்.
- நாவலரே முதன் முதலில் இலக்கண வலுவற்ற தூய்மையான எளிய தமிழ் உரைநடையை கையாண்டார்.
- தமிழ் உரைநடைக்கு இவர் ஆற்றிய தொண்டிற்காக பரிதிமாற்கலைஞர் இவரை வசன நடை கைவந்த வல்லாளர் என பாராட்டினார்.
- சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, சிறந்த தமிழ் நூல்கள் பல பதிப்பித்தார்.
- பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களை பதிப்பித்தார்.
- இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கண கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களை பதிப்பித்து வெளியிட்டார்.
- முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை பாலபாடங்களையும் எழுதி அச்சிட்டு வெளியிட்டார்.