12 July, 2014

பொருள் செயல் வகை

பொருள் கூறு 

பொருளல்லவர் - பொருள் இல்லாதவர்
பொய்யா விளக்கம் -அணையா விளக்கு 
புல்லார் -பற்றார் 
உறுபொருள் -அரசுரிமையால் வரும் பொருள்
உல்கு பொருள் - வரியாக வரும் பொருள் 
தெறு - பகை 
கைத்தொன்று  - கைப்பொருள் 
  கு - உறுதியான படைக்கலம் 
ஒன்பொருள் - சிறந்த பொருள் 
என்  பொருள் - இயல்பாய் கிடைக்கும் பொருள்
இரண்டும் - அன்பும் அறனும்

இலக்கண குறிப்பு :

பொய்யா விளக்கம் , பொருளாக்கம்  -  ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சம்
இருளறுக்கும் , அறனீனும்  திறனீனும் – இரண்டாம் வேற்றுமை தொகைகள்
வந்த பொருள் – பெயரெச்சம்
அறன் , திறன் – கடைப்போலிகள்
விடல் – அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
தன ஒன்னார் , வேந்தன் பொருள் – ஆறாம் வேற்றுமை தொகைகள்
ஈன் குழலி  - வினைத்தொகை
சொல்லச்செவிலி – உருவகம்
குன்றேறி – ஏழாம் வேற்றுமைத்தொகை
செய்க – வியங்கோள் வினை முற்று
செறுநர் செருக்கு  - ஆறாம் வேற்றுமைத்தொகை
ஒண்பொருள், எண்பொருள் – பண்புதொகைகள்
காழ்ப்ப இயற்றியார்  - பெயரெச்சம் 

பெரியாரைத் துணைக் கேட்டல் - இலக்கண குறிப்பு

அறனறிந்து  திறனறிந்து - இரண்டாம் வேற்றுமை தொகைகள்
தேர்ந்து கொளல் - வினையெச்சம்
கொளல் - அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று
உற்ற நோய் - பெயரெச்சம்
ஊறா அமை - செய்யுளிசை அளபெடை
பெற்றியார் - வினையாலணையும் பெயர்
சூழ்வார் , தக்கார் , செற்றார் - வினையாலணையும் பெயர்
துணையார்  , ஆள்வார் - வினையாலணையும் பெயர்
இல்லை - குறிப்பு வினை முற்று
பகை கொளல் - இரண்டாம் வேற்றுமை தொகை

பெரியாரைத் துணைக் கேட்டல் - பொருள் கூறுக

கேண்மை - நட்பு
தேர்ந்து - ஆராய்ந்து
நோய் - துன்பம் 
உறாமை -துன்பம் வராமல்
பேணி - போற்றி 
தமர் - உறவினர் 
தலை - சிறப்பு 
சூழ்வார் - அறிவுடையார் 
சூழ்ந்து கொளல் - நட்பாக்கிக் கொளல் 
செற்றார் - பகைவர் 
இல் - இல்லை 
இடிக்கும் - கடிந்துரைக்கும் 
தகைமை - தன்மை 
ஏமரா - பாதுகாவல் இல்லாத 
மதலை - துணை 
பத்தடுத்த - பத்துமடங்கு 

திருக்குறள் பற்றி .......

திருவள்ளுவ மாலை போன்ற நூல்கள் திருக்குறளைப் புகழ்வதற்கெனப் பாடப்பட்டுள்ளன

திருக்குறள் எனப்படும் முப்பால் நூல் பற்றி பாரதிதாசன் கூறியது
தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப் பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே!

வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!

திருக்குறளை பற்றி பாரதியார்
 வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடி உள்ளார் .

திருவள்ளுவரின் வேறு பெயர்கள்

  • நாயனார்,
  • தெய்வப்புலவர்,
  • செந்நாப்போதர்,
  • பெருநாவலர்,
  • பொய்யில் புலவர்
  • பொய்யாமொழிப் புலவர் என்று பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.

திருக்குறள் பற்றிய சுவையான செய்திகள்

திருக்குறள் என்பது புகழ் பெற்ற இலக்கியமாகும்.

உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது

இதனை இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகக் கருதப்படும்திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்

திருவள்ளுவர் ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.

திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றதுஇப்பாடல்கள் அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை

திருக்குறளில் "பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன .

20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்" அடுத்து 14 அதிகாரங்ள் கொண்ட துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட "ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது.

முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 34 அதிகாரங்கள்.

பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன.

அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

"இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல் களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள்.

களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.

ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

திருக்குறள்

பெரியாரைத் துணைகேட்டல்

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...