திருவள்ளுவ மாலை போன்ற நூல்கள்
திருக்குறளைப் புகழ்வதற்கெனப் பாடப்பட்டுள்ளன
திருக்குறள் எனப்படும் முப்பால் நூல் பற்றி பாரதிதாசன்
கூறியது
தெள்ளு தமிழ்நடை சின்னஞ் சிறிய இரண்டடிகள்
அள்ளு தொறுஞ்சுவை உள்ளுந்தொறும் உணர்வாகும் வண்ணம்
கொள்ளும் அறம்பொருள் இன்பம் அனைத்தும் கொடுத்ததிரு
வள்ளுவனைப் பெற்ற தாற்பெற்ற தேபுகழ் வையகமே!
வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினி லேஅழைத்துச்
செல்லாத தில்லை பொதுமறை யான திருக்குறளில்
இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே!
திருக்குறளை பற்றி பாரதியார்
வள்ளுவன்
தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாடி உள்ளார் .
No comments:
Post a Comment