17 July, 2014

நற்றிணை - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல

Click Here To Continue Reading ...

நந்திக் கலம்பகம் - 10 ஆம் வகுப்பு சமச்சீர் பாடம்


பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு 
      பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு 
      காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும் 
      இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்   
      வானகம் ஆள்வாரே

சொற்பொருள்:

  • புயல் – மேகம்
  • பனண – மூங்கில்
  • பகரா – கொடுத்து
  • பொருது – மோதி
  • நிதி – செல்வம்
  • புனல் – நீர்
  • கவிகை – குடை
  • வானகம் - தேவருலகம்

இலக்கணக்குறிப்பு:
  • பொழிதருமணி – வினையெச்சம்
  • வருபுனல் – வினையெச்சம்
  • நிதிதருகவிகை – வினையெச்சம்
  • இவை இவை - அடுக்குத்தொடர்

நூல் குறிப்பு:

  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
  • பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
  • கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
  • கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
  • பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
  • கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
  • (புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்)


கலித்தொகை - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் 
 போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை  
 பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்  
 அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை 

 அறிவெனப் படுவது பேதையோர் சொல்நோன்றல்
 செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
  நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை 
 முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்   
 பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.

சொற்பொருள்:
  • கிளை – சுற்றம்
  • நோன்றல் – பொறுத்தல்
இலக்கணக்குறிப்பு;
  • ஒழுகுதல் – தொழிற்பெயர்
  • பொறுத்தல் – தொழிற்பெயர்
பிரித்தறிதல்;
  • அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
  • பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
ஆசிரியர் குறிப்பு:
  • நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
  • இவரை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
  • இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
  • கலித்தொகையை தொகுத்தவர் இவரே.
நூல் குறிப்பு:
  • இந்நூல் கலிப்பாவால் ஆனது.
  • இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
  • இசையோடு பாடுவதற்கு ஏற்றது.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 150 பாடல்கள் உள்ளன.
  • கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
  • இந்நூலை “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” எனச் சிறப்பிப்பர்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...