பருமணி பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு
காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும்
இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே
சொற்பொருள்:
- புயல் – மேகம்
- பனண – மூங்கில்
- பகரா – கொடுத்து
- பொருது – மோதி
- நிதி – செல்வம்
- புனல் – நீர்
- கவிகை – குடை
- வானகம் - தேவருலகம்
இலக்கணக்குறிப்பு:
- பொழிதருமணி – வினையெச்சம்
- வருபுனல் – வினையெச்சம்
- நிதிதருகவிகை – வினையெச்சம்
- இவை இவை - அடுக்குத்தொடர்
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
- பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனை பாட்டுடைத் தலைவனாக கொண்டது இந்நூல்.
- கலம்பக நூல்களில் இதுவே முதல் நூல்.
- கலம்பகம் என்பது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பலவகைப் பொருள்களைப் பற்றிப் பாடல்களைக் கலந்து இயற்றப்பெரும் நூல் கலம்பகம்.
- கலம்பகம் பதினெட்டு உருபுகளை கொண்டது.
- (புயவகுப்பு, அம்மானை, கார், ஊசல், இரங்கல், மறம், தழை, தவம், சித்து, பாண், கைக்கிளை, தூது, வண்டு, குறம், காலம், மாதங்கி, களி, சம்பிரதம்)
மிக்க நன்று.
ReplyDeleteமிக்க நன்று.
ReplyDeleteமிக்க நன்று.
ReplyDelete