ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாஅமை
அறிவெனப் படுவது பேதையோர் சொல்நோன்றல்
செறிவெனப் படுவது கூறியது மறாஅமை
நிறைவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர்வௌவல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்.
சொற்பொருள்:
- கிளை – சுற்றம்
- நோன்றல் – பொறுத்தல்
இலக்கணக்குறிப்பு;
- ஒழுகுதல் – தொழிற்பெயர்
- பொறுத்தல் – தொழிற்பெயர்
- அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
- பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
- நல்லந்துவனார் சங்க காலத்தவர்.
- இவரை பற்றிய குறிப்புகள் கிடைக்கப்பெறவில்லை.
- இவர் நெய்தல் கலியில் 33 பாடல்கள் பாடியுள்ளார்.
- கலித்தொகையை தொகுத்தவர் இவரே.
- இந்நூல் கலிப்பாவால் ஆனது.
- இது நாடகப் பாங்கில் அமைந்துள்ளது.
- இசையோடு பாடுவதற்கு ஏற்றது.
- இந்நூலில் கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 150 பாடல்கள் உள்ளன.
- கலிப்பா துள்ளல் ஓசை உடையது.
- இந்நூலை “கற்றறிந்தோர் ஏத்தும் கலி” எனச் சிறப்பிப்பர்.
No comments:
Post a Comment