06 November, 2014

சிந்துவெளி நாகரிகம் - 6 ஆம் வகுப்பு சமச்சீர்

  • சிந்து சமவெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகின்றது .
  • ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்த போது   1856  ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சிந்து நதியின் கிளை நதியான ராவி நதிக்கரையில் இருப்புப்பாதை அமைத்தனர் .
  •   1921  இல் அகழ்வு ஆராய்ச்சியாளர்கள் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் என்பதைக் கண்டறிந்தனர் .
  • ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு புதையுண்ட நகரம்  என்பது பொருள்
  • மொஹஞ்சதாரோ என்ற சிந்தி மொழிச் சொல்லுக்கு இடுகாட்டு மேடு என்பது பொருள் .
  • சிந்துவெளி மக்கள் டெர்ராகோட்டா எனப்படும் சுடுமண்பாண்டம் செய்வதில் வல்லவர்கள்  .
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுது 


























விடைகள் 
1 . இ 
2.  இ
3.  இ
4.  ஆ
5.  அ
6.  அ

பொருத்துக 










விடைகள் 
  1. மொஹஞ்சதாரோ
  2. 1921
  3. மண்பாண்டம் 
  4. சுடு மண்பாண்டம் 
  5. ராவி 

சொற்றொடர் வகைகள்

1. செய்தித்தொடர்:

அ) பரிதிமாற் கலைஞர் மதுரைக்கருகில் உள்ள விளாச்சேரியில் பிறந்தார்.
ஆ) திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
இவ்விரு தொடர்களும் செய்திகளைத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன. இவ்வாறு, ஒரு கருத்தினைச் செய்தியாகத் தெரிவிப்பது செய்திததொடர் எனப்படும்.

2. வினாத்தொடர்:

அ) எழில், என்ன சாப்பிட்டாய்?
அ) அன்பரசி, நேற்று நீ ஏன் பள்ளிக்கு வரவில்லை?
இ) எங்கே செல்கிறாய்?
இவ்வாறு வினாப்பொருளைத் தரும் தொடர், வினாத்தொடர் எனப்படும். என்ன? ஏன்? , எங்கே? எப்படி? முதலிய வினாச்சொற்கள் வினாத்தொடரில் அமையும்.

3. உணர்ச்சித்தொடர்:

நீங்கள் சென்னைக்கு அருகிலுள்ள பூண்டி ஏரியைப் பார்த்ததுண்டா ?
அதனைப் பார்த்ததும் உங்களுக்குத் தோன்றியது என்ன?
“அடேயப்பா! எவ்வளவு பெரிய ஏரி!”

கண்ணகியும் கயல்விழியும் பாதையில் நடந்துகொண்டே பேசிச் செல்கின்றனர்.
கயல்விழியின் காலில் முள் ஆழமாகக் குத்திவிட்டது. உடனே, அவள் எவ்வாறு அலறியிருப்பாள்?
“ஐயோ, முள் குத்திவிட்டதே!”

இவ்வாறு நாம் பேசும் செய்திகள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் தொடர்களாக அமைந்தால், அவற்றை உணர்ச்சித் தொடர்கள் என்கிறோம்.

மகிழ்ச்சி, வியப்பு, துன்பம் முதலிய உணர்ச்சிகள் வெளிப்படுமாறு அமைவது, உணர்ச்சித் தொடர்.

என்னே என்னும் சொல்லை வியப்புக் குறித்தும், அந்தோ என்னும் சொல்லைத் துன்பம் குறித்தும் சொற்றொடர்களில் அமைத்துக் காட்டலாம்.

(எ-டு) என்னே, இமயமலையின் உயரம்!
அந்தோ, நாய் வண்டியில் அடிபட்டுவிட்டதே!

4. கட்டளைத்தொடர்:

நீ பள்ளிக்குப் புறப்படும்போது, உன்னிடம் அம்மா கூறுவது என்ன?
பார்த்துப் போ, கவனமாகப் படி என்றுதானே.
இவ்வாறு, ஒரு செயல் அல்லது சில செயல்களைப் பின்பற்றும்படி ஆணையிட்டுக் கூறுவது, கட்டளைதொடர்.

5. தனிநிலைத்தொடர்:

அழகன் பாடம் எழுதுகிறான்.
மா, பலா, வாழை ஆகியன முக்கனிகள்.

இத்தொடர்களில் முதல் தொடரில் அழகன் என்பது எழுவாய். இரண்டாம் தொடரில் மா, பலா, வாழை என்பன எழுவாய்கள்.
இவ்வாறாக, ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒர் பயனிலையைக் கொண்டுமுடிவது, தனிநிலைத்தொடர்.

6. தொடர்நிலைத்தொடர்:

கார்மேகம் கடுமையாக உழைத்தார்; அதனால், வாழ்வில் உயர்ந்தார்.
நேற்று மழை பெய்தது; அதனால், ஏரி குளங்கள் நிரம்பின.
இவ்வாறு, ஓர் எழுவாய் பல பயனிலைகளைக்கொண்டு முடிவது தொடர்நிலைத்தொடர். தொடர்நிலைத் தொடர்கள் அதனால், ஆகையால், ஏனெனில் முதலிய இணைப்புச்சொற்களைப் பெற்று வரும்.

7. கலவைத்தொடர்:

நேற்று புயல் வீசியதால், பள்ளிக்கு விடுமுறை
முருகன், இரவும் பகலும் அயராது படித்ததால் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றான்.

இவ்வாறு, ஒரு தனிச்சொற்றொடர் ஓன்று அல்லது அதற்குமேற்பட்ட துணைத் தொடர்களுடன் கலந்து வருவது, கலவைத்தொடர்.

8, செய்வினைத்தொடர்:


“குடியரசுத் தலைவர் உலகத் தமிழ் மாநாட்டைத் தொடங்கிவைத்தார்”. இத்தொடரில்,

குடியரசுத் தலைவர் - எழுவாய்
உலகத் தமிழ் மாநாடு - செயப்படுபொருள்
தொடங்கிவைத்தார் - பயனிலை
இவ்வாறாக எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர் செய்வினைத் தொடர் எனப்படும். செயப்படுnpபாருளோடு இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ) வெளிப்பட்டு வரும். சில தொடர்களில் மறைந்தும்வரும்.

(எ-டு) மாவட்ட ஆட்சியர் கொடி ஏற்றினார்
.

9. செயப்பாட்டு வினைத்தொடர்: (செயப்படுபொருள்
வினைச்சொல்லைககொண்டு முடிவது)

உலகத்தமிழ் மாநாடு குடியரசுத் தலைவரால் தொடங்கி வைக்கப்பெற்றது.

இத்தொடரில் சொற்கள் செயப்படுபொருள். எழுவரய், பயனிலை என்னும் வரிசையில் அமைந்துள்ளன. எழுவாயோடு “ஆல்” என்னும் முன்றாம் வேற்றுமை உருபும் உள்ளது. இவ்வகைத் தொடர்களில் பயனிலையோடு படு, பட்டது, பெறு, பெற்றது என்னும் துணைவினைகளுள் ஒன்று சேர்ந்து வரும்.

10, தன்வினைத்தொடர் (எழுவாய், தானே செய்யும் தொழிலை உணர்த்துவது)

பாத்திமா திருக்குறள் கற்றாள்.
இத்தொடரிலுள்ள பாத்திமா என்னும் எழுவாய், ஒரு செயலைத் தானே செய்வதனால், இது தன்வினைத்தொடராகும்.

11. பிறவினைத்தொடர் (எழுவாய், ஒரு செயலைப் பிறரைக்கொண்டு செய்விப்பது)

பாத்திமா திருக்குறள் கற்பித்தாள்.
இது பிறவிதை;தொடர். பாத்திமா என்னும் எழுவாய், அச்செயலைப் பிறரைக கொண்டு செய்விப்பதனால், இது பிறவினைத்தொடராகும்.

12. நேர்கூற்றுத்தொடர் (ஒருவர் பேசுவதை, அவர் பேசியபடியே கூறுவது)
ஆசிரியர், “மாணவர்களே, நாளை ஓழுக்கமுடைமையில் குறள்கள் ஐந்தனைப் படித்து வருக”, என்றார். இவ்வாறு ஆசிரியர், மாணவர்களிடம் கூறிய இத்தொடர் நேர்கூற்றுத் தொடராகும்.
இதில் மேற்கோள் குறிகள் இடம்பெறும்; தன்னம, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும்; இங்கு, இப்போது, இவை எனச் கூட்டுப்பெயர்கள் வரும். நேற்று, இன்று, நாளை எனக் காலப்பெயர்களும் வரும்.
(எ-டு)
தேன்மொழி பொன்னியிடம், “நான், நாளை மதுரைக்குச் செல்வேன்” என்றாள்.

13. அயற்கூற்றுத்தொடர்:

ஒருவர் அல்லது பலரின் உரையாடல்களை அயலார் கூறுவதுபோல் அமைப்பது அயற்கூற்றுத்தொடர்.

பொன்னியிடம் தேன்மொழி, தான் மறுநாள் மதுரைக்குச் செல்வதாகக் கூறினாள்.

அயற்கூற்றில் மேற்கோள் குறிகள் வாரா; இக்கூற்றில் தன்மை, முன்னிலைப்
பெயர்கள், படர்க்கைப் பெயர்களாக மாறும்; சுட்டுப்பெயர்கள் அது, அவை, அங்கே என மாறும்;

காலப்பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்; என்று, ஆக என்னும் இலைப்புச்சொற்களும் இடம்பெறும்.

14. உடன்பாட்டுத்தொடர்:

செயல் அல்லது தொழில் நிகழ்வதை நேர்மறையாக உணத்துவது, உடன்பாட்டுத்தொடர்
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள்.

15. எதிர்மறைத்தொடர்:

கலைச்செல்வி கட்டுரை எழுதிலள்.
இத்தொடரில், கலைச்செல்வி கட்டுரை எழுதவில்லை எனச் செயல் நிகழாமையைக் கூறுவதனால், இது எதிர்மறைத்தொடர்.

16. பொருள்மாறா எதிர்மறைத்தொடர்:


கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள்.
கலைச்செல்வி கட்டுரை எழுதினாள் என்னும் தொடர் உடன்பாட்டுததொடர்.
கலைச்செல்வி கட்டுரை எழுதவில்லை என்பது இதற்கான எதிர்மறைத்தொடர்.

மேலே உள்ள உடன்பாட்டுத்தொடர் பொருள்மாறா எதிர்மறைததொடராக மாற்ற வேண்டுமானால், அதனை இரண்டு எதிர்மறைகளைக்கொண்ட தொடராகக், கலைச்செல்வி கட்டுரை எழுதாமல் இராள் என மாற்றுதல்வேண்டும்.

 இதற்குக் கலைசசெல்வி கட்டுரை எழுதினாள் என்பதே பொருள் என்பதனால், இது பொருள்மாறா எதிர்மறைத்தொடர் எனப்படுகிறது.
இரண்டு எதிர்மறைச்சொற்கள் சேர்ந்து வந்தால், அது உடன்பாட்டுப் பொருளைத் தரும்.

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...