நற்றிணை - 10 ஆம் வகுப்பு சமச்சீர்


அரிகால் மாறிய அங்கண் அகல்வயல்
மறுகால் உழுத ஈரச் செறுவின்
வித்தொடு சென்ற வட்டி பற்பல
மீனொடு பெயரும் யாணர் ஊர
நெடிய மொழிதலுங் கடிய ஊர்தலும்
செல்வம் அன்றுதன் செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வஞ் செல்வமென் பதுவே.
                                                       -மிளைகிழான் நல்வேட்டனார் 

சொற்பொருள்:

  • அரி – நெற்கதிர்
  • சேறு – வயல்
  • யாணர் – புதுவருவாய்
  • வட்டி – பனையோலைப் பெட்டி
  • நெடிய மொழிதல் – அரசரிடம் சிறப்புப் பெறுதல்.
  • இலக்கணக்குறிப்பு:
  • சென்ற வட்டி – பெயரெச்சம்
  • செய்வினை – வினைத்தொகை
  • புன்கண், மென்கண் – பண்புத்தொகை
  • ஊர – விளித்தொடர்

பிரித்தறிதல்:

  • அங்கண் - அம் + கண்
  • பற்பல - பல + பல
  • புன்கண் - புன்மை + கண்
  • மென்கண் - மேன்மை + கண்

ஆசிரியர் குறிப்பு:

  • மிளை என்னும் ஊரில் பிறந்தவராதலால், மிளைகிழான் நல்வேட்டனார் என்னும் பெயர் பெற்றார்.
  • இவர், ஐந்திணைகளைப் பற்றியும் பாடல் இயற்றியுள்ளார்.
  • இவர் பாடியனவாக் நற்றிணையில் நான்கு பாடலும் குறுந்தொகையில் ஒன்றாக ஐந்து பாடல் உள்ளன.

நூல் குறிப்பு;

  • பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்கநூல்கள்.
  • “நல்” என்னும் அடைமொழியை கொண்டு போற்றப்படுவது நற்றிணை.
  • இதில் ஐந்து தினைகளுக்குமான பாடல்கள் உள்ளன.
  • இதிலுள்ள பாடல்கள், ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்டவை.
  • இப்பாடல்களைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை.
  • தொகுப்பித்தவர் “பன்னாடு தந்த மாறன் வழுதி”.
  • இதில் நானூறு பாடல்கள் உள்ளன.
  • பாடினோர் இருநூற்றெழுபத்தைவர்.




















No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...