உலகபொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல
பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது
இதனை
இயற்றியவர் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கும் கி.பி 5ம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராகக்
கருதப்படும்திருவள்ளுவர் என்று அறியப்படுபவர் ஆவார்
திருவள்ளுவர்
ஆண்டு என்பது பொது ஆண்டோடு 31 ஆண்டுகள் கூட்ட வேண்டும்.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று
பால்களும் கொண்டமையால் "முப்பால்" எனப் பெயர் பெற்றதுஇப்பாடல்கள்
அனைத்துமே குறள் வெண்பா என்னும் வெண்பா வகையைச் சேர்ந்தவை
திருக்குறளில்
"பாயிரம்" என்னும் இயலில் நான்கு அதிகாரங்கள் வைக்கப்பட்டுள்ளன .
20 அதிகாரங்களுடன் "இல்லறவியல்"
அடுத்து 14 அதிகாரங்ள் கொண்ட
துறவறவியல் இறுதியில் "ஊழ்" என்னும் ஒரே அதிகாரம் கொண்ட
"ஊழியல்" என வகைபடுத்தப் பட்டுள்ளது.
முதற்பாலாகிய அறத்துப்பாலில்
மொத்தம் 34 அதிகாரங்கள்.
பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன.
அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன.
அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.
"இன்பத்துப்பால்" அல்லது "காமத்துப்பாலி"ல்
களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள்.
களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக
மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன.
ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.
No comments:
Post a Comment