சுமித்திரா மகஜன் பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் பதினாறாவது மக்களவையின் மக்களவைத் தலைவரும் ஆவார்.
2014இல் எட்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் வென்றுள்ளார். பதினாறாவது மக்களவையில் இவ்வாறு எட்டுமுறை வென்ற மூவரில் ஒருவராக உள்ளார்.
மிக நீண்டகாலம் உறுப்பினராக உள்ள பெண் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். 1989ஆம் ஆண்டிலிருந்து மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தொடர்ந்து வென்று வந்துள்ளார்.
முந்தைய பாஜக ஆட்சியில் நடுவண் இணை அமைச்சராக 2002 முதல் 2004 வரை இருந்துள்ளார். மனிதவள மேம்பாடு, தொலைத்தொடர்பு, பெட்றோலியம் துறைகளில் அமைச்சராகப் பணி புரிந்துள்ளார். இந்தூர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் சட்டமும் படித்துள்ளார்.
No comments:
Post a Comment