1.வழூஉச் சொல்லற்ற தொடர் எது ?
- வலது பக்கச் சுவரில் எழுதாதே
- வலப்பக்கச் சுவரில் எழுதாதே
- வலப்பக்கச் சுவற்றில் எழுதாதே
- வலது பக்கச் சுவற்றில் எழுதாதே
2.“கொம்பினை யொத்த மடப்பிடி” யார்?
- கண்ணகி
- சீதை
- திரௌபதி
- மாதவி
3.Ancient and Modern Tamil Poets என்னும்
நூலின் ஆசிரியர் ?
- சி என் அண்ணாத்துரை
- வேதநாயகம் பிள்ளை
- மறைமலையடிகள்
- உ வே சாமிநாதையர்
4.“திருவாரூர் நான்மணிமாலை” என்னும் நூலில் இடம்பெறாத
பாவகை
- வெண்பா
- ஆசிரியப்பா
- கட்டளைக் கலித்துறை
- வஞ்சிப்பா
5.பின்வருவனவற்றுள் நம்மாழ்வாரைக் குறிக்காத பெயர்
- பராங்குசன்
- தமிழ்மாறன்
- தமிழ்வியாசர்
- சடகோபன்
6.பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை இம்மூலிகை
நீக்குவதால் இதற்கு குமரி என பெயருமுண்டு
- குப்பைமேனி
- துளசி
- கீழாநெல்லி
- கற்றாழை
7.“வீரம் இல்லாத வாழ்வும் விவேகமில்லாத வீரமும் வீணாகும் “
என்று எடுத்துரைத்தவர்
- காந்தியடிகள்
- கல்யாணசுந்தரனார்
- முத்துராமலிங்கர்
- விவேகானந்தர்
8.பொருந்தாததைச் சுட்டு
- வாதம்
- ஏமம்
- பித்தம்
- சீதம்
9.தென்னவன் பிரமராயன் என்ற விருதிற்கு உரியவர்
- திருநாவுகரசர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
- திருஞானசம்பந்தர்
10.முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் – இவ்வாறு தமிழரின் நாகரிகப்
பண்பை சுட்டும் இலக்கியம்
- நற்றிணை
- குறுந்தொகை
- ஐங்குறுநூறு
- அகநானுறு
விடைகள்
- வலப்பக்கச் சுவரில் எழுதாதே
- திரௌபதி
- மறைமலையடிகள்
- வஞ்சிப்பா
- தமிழ்வியாசர்
- கற்றாழை
- முத்துராமலிங்கர்
- ஏமம்
- மாணிக்கவாசகர்
- நற்றிணை
No comments:
Post a Comment