கம்பர்
தேரழுந்தூரில் பிறந்தார். கம்பர் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்தவர். சடையப்ப
வள்ளல் இவரை
ஆதரித்தார் .
கம்பரது
காலம் கி பி பன்னிரண்டாம் நூற்றாண்டு.
கம்பனின் காலத்தைப் பற்றிய மாறுபட்ட கருத்துக்கள்
உண்டு. ஒட்டக்கூத்தன், சேக்கிழார் ஆகியோருக்கு
அவர் சமகாலத்தவர் அல்லது அவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் என்று உறுதியாகச்
சொல்லலாம்.
சடையப்ப
வள்ளலின் பெயர்
இடம்பெற்றுள்ள கல்வெட்டுக்களில் உள்ள லிபியும் தியாக மாவிநோதன் என்பவனுக்கு உரிய
சோழநாடு என்று கம்பன் சொல்லியிருப்பதும் இந்தக் கருத்தை உறுதிபடுத்துகின்றன. தியாக
மாவிநோதம் என்பது மூன்றாம் குலோத்துங்கனின் பட்டப்
பெயர்களுள் ஒன்று.
கம்பர் எழுதிய நூல்கள்
- சிலையெழுபது
- சடகோபர் அந்தாதி
- சரசுவதி அந்தாதி
- திருக்கை வழக்கம்
- கம்பராமாயணம்
- ஏரெழுபது
- மும்மணிக்கோவை
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் ,
விருத்தமெனும் ஒண்பாவிற்கு கம்பன் , கல்வியிற் பெரியவர் கம்பர் என்னும் தொடர்களால்
கம்பரின் பெருமையை அறியலாம் . யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் என்று பாரதியார்
புகழ்ந்து பாடியுள்ளார்.
No comments:
Post a Comment