15 July, 2014

சிலப்பதிகாரம்


  • சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது.
  • சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று.
  • இந்நூல் தமிழில்எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.
  • இந்நூல் பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள் எனவும் வழங்கப்படுகிறது.
  • இக்காப்பியத்தில் இயல்இசைநாடகம் என்னும் மூன்றனையும் காணலாம்.
  • கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர்
  • ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க  சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்என்றும் கூறுவர்
  • இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோஅடிகள் என்பவராவார்.
  • இவர் புகழ் பெற்ற சேரமன்னன்செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.
  • அரச பதவியை உதறிவிட்டு துறவறம் பூண்டு வாழ்ந்தவர் இளங்கோ அடிகள்.
  • இவர் கி. பி ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் என்ற ஆதாரமாக செங்குட்டுவன்கண்ணகிக்கு கோயில் எடுத்து விழாக் கொண்டாடிய போது இலங்கை மன்னன் கயவாகு உடனிருந்தான் என்பதை இளங்கோவடிகளே கடல்சூழ் இலங்கைக்கயவாகு வேந்தனும் நன்னாள் செய்த நாளினி வேள்வியும் (வரந்தரு காதை )எனக் கூறியுள்ளார். 
  • கயவாகு மன்னனது ஆட்சி கி.பி 2-ஆம் நூற்றாண்டு எனஇலங்கை சரித்திரமாகிய மகாவம்சம் கூறுகிறது

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;,

என்று பாரதியார் கூறுகிறார்

  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள்.
  • நற்றிணைப் பாடல் கண்ணகி வரலாற்றைக் குறிப்பிடுகிறது
  • இது உரையிடப்பட்ட பாட்டுடை செய்யுள் எனவும் வழங்கப்பெறும்.


இக்காப்பியத்தில் பதிகம் என்ற பகுதியில் சிலப்பதிகாரம் கூறும் செய்திகள்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்,
உரைசால் பத்தினியை உயர்ந்தோர்  ஏத்துவர்,
ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்

காண்டங்கள்
  1. புகார் காண்டம்
  2. மதுரை காண்டம்
  3. வஞ்சிக் காண்டம்


புகார் காண்டம்

இது 10 காதைகளைக் கொண்டது.அவையாவன
  1. மங்கல வாழ்த்துப் பாடல்
  2. மனையறம் படுத்த காதை.
  3. அரங்கேற்று காதை.
  4. அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
  5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
  6. கடல் ஆடு காதை.
  7. கானல் வரி
  8. வேனிற்காதை
  9. கனாத் திறம் உரைத்த காதை.
  10. நாடு காண் காதை


மதுரை காண்டம்
இது 13 காதைகளைக் கொண்டது. அவை,
  1. காடு காண் காதை,
  2. வேட்டுவ வரி,
  3. புறஞ்சேரி இறுத்த காதை,
  4. ஊர் காண் காதை,
  5. அடைகலக் காதை,
  6. கொலைக்களக் காதை,
  7. ஆய்ச்சியர் குரவை,
  8. துன்ப மாலை,
  9. ஊர் சூழ் வரி,
  10. வழக்குரை காதை,
  11. வஞ்சின மாலை,
  12. அழற்படுகாதை,
  13. கட்டுரை காதை

வஞ்சிக் காண்டம்

1.குன்றக் குரவை
2.காட்சிக் காதை
3.கால்கோள் காதை.
4.நீர்ப்படைக் காதை
5.நடுநற் காதை.
6.வாழ்த்துக் காதை.
7.வரம் தரு காதை.


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...