15 July, 2014

பாரதிதாசன்


பாரதிதாசன் (ஏப்ரல் 29, 1891 - ஏப்ரல் 21, 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர்.


  • இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். 
  • தமிழாசிரியராக பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார்.

  • பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக்கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். 
  • இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.

  • எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:
  • பாண்டியன் பரிசு
  • எதிர்பாராத முத்தம்
  • குறிஞ்சித்திட்டு
  • குடும்ப விளக்க 
  • இருண்ட வீடு
  • அழகின் சிரிப்பு 
  • தமிழ் இயக்கம்
  • இசையமுது
  • குயில்
  • தமிழச்சியின் கத்தி
  • பாண்டியன் பரிசு
  • பாரதிதாசன் ஆத்திசூடி
  • பெண்கள் விடுதலை
  • பிசிராந்தையார் 
  • மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது
  • முல்லைக் காடு
  • கலை மன்றம்
  • விடுதலை வேட்கைமற்றும் பல.

பாரதிதாசன் அவர்கள் நகைச்சுவை உணர்வு நிரம்பியவர். கவிஞருடைய படைப்பான "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்கு அவரது மரணத்திற்குப் பின், 1970 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...