21 November, 2014

ஜி 20 மாநாடு 2014



  • ஜி 20 மாநாடு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்து முடிந்துள்ளது. 
  • ஜி 20 மாநாடு: உலகில் வேகமாக வளர்ந்து வரும் 20 நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பே ஜி 20 ஆகும். 
  • இந்த நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார ஒத்துழைப்புக்கள் குறித்து தங்களுக்குள் கூடிப் பேசி பல முடிவுகள் எடுக்கின்றன.
  •  இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் ஜி 20 மாநாடு நடந்து முடிந்துள்ளது. 
  • இந்த மாநாட்டில் உலகளாவிய வளர்ச்சி,  வாழ்க்கைத் தரம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்கள் முதன்மை நோக்கங்களாகக் கொள்ளப்பட்டன. 
  • வரும் 2018 ஆம் ஆண்டுக்குள் உறுப்பு நாடுகளுக்குள் குறைந்தது 2 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவது குறித்து ஆராயப்பட்டது. 
  • லைபீரியா, கினியா, சியாரா லியோன் உள்ளிட்ட மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் எபோலா நோய் தாக்கத்தின் காரணமாக அடைந்த துயர்களுக்கு இந்த மாநாட்டில் ஆழ்ந்த வேதனை தெரிவிக்கப்பட்டது. 
  • மோடி பங்கேற்பு: மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, கருப்புப் பணத்தை முழுமையாக மீட்டுவருவது, பொருளாதார வளர்ச்சியை எட்டுவதில் மிக முக்கியப் பங்காற்றும் என்ற கருத்தை வலியுறுத்தினார். 
  • இதற்காக சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...