07 August, 2014

நளவெண்பா - 8 ஆம் வகுப்பு சமச்சீர்


பொருள் தருக :
  1.      ஆழி கடல்
  2.      விசும்பு வானம்
  3.      செற்றான் வென்றான்
  4.      அரவு பாம்பு
  5.      பிள்ளைக்குருகு நாரைக்குஞ்சு 
  6.      வள்ளை ஒருவகை நீர்க்கொடி
  7.      கடா எருமை
  8.      வெளவி கவ்வி
  9.      சங்கின் பிள்ளை சங்கின்குஞ்சுகள்
  10.      கொடி பவளக்கொடி
  11.      கோடு கொம்பு
  12.      கழி உப்பங்கழி
  13.      திரை அலை
  14.      மேதி எருமை
  15.      கள் தேன்
  16.      புள் அன்னம் 
  17.      சேடி தோழி
  18.      ஈரிருவர் நால்வர்
  19.      கடிமாலை மணமாலை
  20.      தார் மாலை
  21.      காசினி நிலம்
  22.      வெள்கி நாணி
  23.       ஒண்தாரை – ஒளிர்மிக்க மலர்மாலை
  24.      மல்லல் வளம்
  25.      மடநாகு இளைய பசு
  26.      மழவிடை இளங்காளை
  27.      மறுகு அரசவீதி 
நூல் குறிப்பு :
  •  மகாபாரதத்தின் துணைக் கதைகளுள் ஒன்றான, நிடத நாட்டை ஆண்ட நளன் என்னும் மன்னனின் கதையைத் தமிழில் கூற எழுந்ததே நளவெண்பா ஆகும்.
  •  சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  •  இவற்றுள் 13 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். இதில் 431  வெண்பாக்கள் உள்ளன
 ஆசிரியர் குறிப்பு :
  • நளவெண்பா  இயற்றிய புகழேந்திப் புலவர் தொண்டை நாட்டுப் பொன்விளைந்த களத்தூரிலே தோன்றியவர்.
  • பாண்டியனாகிய வரகுணனுக்குப் பெரிதும் அன்புடையவராக அவன் அவையில் வீற்றிருந்தார். பாண்டியனின் மகளுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்.
  • அவள் சோழ மன்னான குலோத்துங்கனை மணக்கவும், அவள் வேண்டுகோளின்படி இவரும் சோழனின் அவைக்குச் சென்றார்.
  • அங்கே இவருக்கும் சோழனின் ஆசிரியர் ஒட்டக்கூத்தருக்கும் பகைமையும் மனமாறுபாடும் உண்டாகி நாளுக்கு நாள் பெருகி வரலாயிற்று.
  • இவர்களுக்கிடையே நடைபெற்ற பலவாக்குவாதங்களுக்குச் சான்றாக பல பாடல்கள் உள்ளன.  
  • இதன் பொருட்டு இவர் பல கொடுமைகளுக்கும் உள்ளானார். முடிவில் புலவர்களிடையே சமாதானம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. 
  • ஒட்டக்கூத்தரிடம் மாறுபாடு நிலவிய காலத்தில், இவர் சில காலம் மள்ளுவநாட்டைச் சேர்ந்த சந்திரன் சுவர்க்கி என்னும் குறுநில மன்னனின் ஆதரவில் வாழ்ந்து வந்தார்.
  • அந்த நாளில் அவன் விருப்பப்படி இவர் இயற்றியதே இந்த நளவெண்பா என்னும் நூல் ஆகும். 








No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...