அளபெடை
(நீண்டு ஒளிக்கும் ஒலி)
அளபெடை
என்பது நீண்டு ஒலிக்கும் ஒலியாகும். இது இரண்டு வகைப்படும்
1. உயிரளபெடை (உயிர் + அளபெடை)
செய்யுளில் ஓசை குறையும்போது உயிரெழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள் தம்மளவில் நீண்டு ஒலிப்பது உயிரளபெடை. செய்யுளில் அளபெடுப்பதால் இஃது செய்யுளிசை அளபெடை எனவும் அழைக்கப்படும். உயிரெழுத்துக்களில் நெட்டெழுத்துக்கள் ஏழுமே அளபெடுக்கும். எந்த நெட்டெழுத்து அளபெடுக்கிறதோ அதன் இனமான குற்றெழுத்து அதன்பக்கத்தில் வரிவடிவில் அடையாளமாக எழுத்தப்படும். காட்டு:- ஓஒதல், உழாஅர்
1. செய்யுளிசை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3. சொல்லிசை அளபெடை
2. ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதனை நிறைவுசெய்யும் பொருட்டு சொல்லிலுள்ள மெய்யெழுத்துகள்அளபெடுக்கும். இவ்வாறு அளபெடுப்பது ஒற்றளபெடைஎன்றழைக்கப்படும்:-
(உ-ம்)
"இலங்ங்கு வெண்பிறை" - (இடையில்வந்தது)
"கலங்ங்கு நெஞ்சம்" - (இடையில் வந்தது)
"விடங்ங் கலந்தானை" - (இறுதியில்வந்தது)
அளபெடை
|
|||
1.உயிர்அளபெடை
|
2. ஒற்றளபெடை
|
||
1.செய்யுளிசை(அ)இசைநிரை
|
2.இன்னிசை
|
3.சொல்லிசை
|
ஒரு மெய்யெழுத்து
இரட்டிக்கும்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள்,ஃ
|
“அ,எ,ஒ” என்றஎழுத்தால் முடியும்
|
“உ”என்ற
எழுத்தில்முடியும்
|
“இ”என்ற
எழுத்தில்முடியும்
|
|
1.படாஅமை
|
1.உண்பதூஉந்
|
1.தழீஇ
|
1.மடங்ங்
|
2.வாடாஅது
|
2.துன்புறூஉந்
|
2.அறனழ்இ
|
2.விடங்ங்
|
3.தொழாஅள்
|
3.இன்புறூஉம்
|
3.புறனழீஇ
|
3.கண்ண்
|
4.போயாயமொரு
|
4.கொடுப்பதூஉம்
|
4.குடிதழ்இ
|
4.பொன்ன்
|
5.ஒஒதல்
|
5.எடுப்பதூஉம்
|
5.உரனசைஇ
6.வரனசைஇ
|
5.மின்ன்
6.என்ன்
|
|
அளவு எடுக்கும்போது தோன்றும் இன எழுத்துக்கள்.
எழுத்து உயிர் நெடில்
|
இன எழுத்து / உயிர் குறில்
|
ஆ
|
அ
|
ஈ
|
இ
|
ஊ
|
உ
|
ஏ
|
எ
|
ஓ
|
ஒ
|
ஐ
|
இ
|
ஓள
|
உ
|
No comments:
Post a Comment