27 November, 2014

குருசடை தீவு, இராமேஸ்வரம்


குருசடை தீவு வெளியிட ஜீவராசிகள் மற்றும் அழிந்து வரும் உயிரினங்களின் சொர்க்கமாக இருக்கும் தீவாகும். இந்த தீவிற்கு வருபவர்களில பெரும்பாலோர் கடலுயிர் பற்றிய சிறப்பு வல்லுநர்களாகவோ அல்லது நீர் சம்மந்தமான உயிர்களை ஆராய்ச்சி செய்பவர்களாகவோ இருந்து கடலுயிர் வாழ்க்கை முறையை தீவிரமாக கவனித்து, கண்டுபிடிப்புகளை நிகழ்த்துவர்களாகவே இருப்பார்கள். எனினும், இந்த தீவு தனித்தன்மையான பவளப்பாறைகளுக்காகவும் புகழ் பெற்ற இடமாகும்.
மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் இந்த தீவுகள், மண்டபம் பகுதியில் இருந்து 7 கிமீ தொலைவில் உள்ளது. மன்னார் வளைகுடாவில் வாழ்க்கையை அனுபவித்திடும் டால்பின்கள் மற்றும் கடற்பசுக்களை இந்த தீவில் உங்களால் காண முடியும்.


இந்த கடற்பகுதியின் சுற்றுப்புறங்களிலிருந்து பெரிதும் தனித்தன்மையாக மாறுபட்டுள்ள பாலனோக்லோஸ்ஸஸ் என்ற அரிய வகை வாழும் கடற்பாசிகளை இந்த தீவு பெற்றுள்ளது.
இந்த தீவின் மற்றுமொரு கடல் சூழலிற்கான சொத்து இங்கு காணப்படும் கடற்பஞ்சுகளாகும். இந்த கடற்பஞ்சு உயிரினத்திற்கு அருகில் வேறு ஏதாவது உயிரினம் வந்தாலோ அல்லது யாராவது இதற்கு ஆபத்து விளைவிக்க நினைத்தாலோ அமீபாவைப் போன்று இது உருமாறி விடும். கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடமான இந்த தீவுக்கு செல்லும் முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...