26 November, 2014

இன்றைய கேள்விகள் - 26/11/14

1.ஐந்தடி முதல் பன்னிரண்டு அடிகள் வரை பாடப்படும் வெண்பா எது ?
A.குறள்  வெண்பா
B.நேரிசை வெண்பா
C.இன்னிசை வெண்பா
D.பஃறொடை வெண்பா 
{பஃறொடை வெண்பா: 

நான்கு அடிகளுக்கு மேல் அமைந்த வெண்பா பஃறொடை வெண்பா எனப்படும். இவ் வெண்பா அதிகபட்சம் 12 அடிகள் மட்டுமே கொண்டிருக்கும்}

2.விளரியாழ்   எவ்வகைத்திணைக்குரியது ?

A.குறிஞ்சி
B.மருதம்
C.முல்லை
D.நெய்தல் 

3.இரீ இ   - என்பதன் இலக்கணக் குறிப்பு

A.சொல்லிசை அளபெடை
B.செய்யுளிசை அளபெடை
C.இன்னிசை அளபெடை
D.உரிச்சொற்றொடர்

4.பொருந்தாத இணையைக் கண்டறிக
A.குமரிக்கண்டம்  - கண்ணதாசன்
B.தொடுவானம் - வாணிதாசன்
C.தேன்மழை - முடியரசன் 
D.உழவும் தொழிலும்  - மருதகாசி

5.தில்லையாடி வள்ளியம்மை யார் தலைமையில் போராடினார் ?
A.நேரு
B.காந்தி 
C.கோகலே
D.திலகர்

6.தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் ?
A.இராமாமிர்தம் அம்மையார்
B.டாக்டர் முத்து லெட்சுமி
C.தருமாம்பாள்
D.நீலாம்பிகை .

7.1963 ல் மேற்கொண்ட கடல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட நகரம்
A.துறையூர்
B.உறையூர்
C.காவிரிப்பூம்பட்டினம்
D.கொற்கை

8.யவனர்கள் என்பவர்கள்
A.கிரேக்கர்கள்
B.உரோமானியர்கள்
C.எகிப்தியர்கள்
D.A   மற்றும்   B

9.சென்னையில் முதல் ஆழ்வார்களால் பாடபெற்ற தலம்
A.மயிலாப்பூர்
B.திருவல்லிக்கேணி 
C.திருவொற்றியூர்
D.திருநின்றவூர்

10.கடற்கரையை ஒட்டியுள்ள பேரூர்கள் எவ்வாறு
அழைக்கப்பட்டன ?
A.பட்டினம் 
B.பாக்கம்
C.கரை
D.காடு


No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...