- உலகில் எங்கே ஒரு மூலையில் நடைபெறும் சிறிய நிகழ்வு செய்தி ஆகிறது.
- அறிவியல் தொழில்நுடப் வளர்ச்சியின் பெரிய முன்னேற்றத்தின் விளைவாக உடனுக்குடன் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
- ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் அன்புத் தொண்டர் ஆறுபேர்கள் அறியச் செய்வார் செய்தியினை கூறியவர் - அறிஞர் கிப்ளிங்
- ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் இடம்பெறும் பக்கம் - செய்தியின் முகப்புப் பக்கம்.
- ஏன்? என்ன? எப்போது? எப்படி? எங்கே? யார்? எனும் வினாக்களுக்கு விடைகள் காணும் பணி - கடலில் மூழ்கி முத்தெடுப்பது போன்ற அரிய பணி.
- செய்தியை இனங்கண்ட பின்னர் செய்தியாளர் செய்தியைத் திரட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள்.
- செய்தியைப் பெறுதல் என்பது துப்பறிதல் போன்றது.
- செய்தியாளர்கள் அரசின் அறிக்கை, வாணிகக் குழுக்களின் வெளியீடுகள், நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டங்கள் போன்றவற்றை படித்து செய்தியைத் திரட்டுகின்றார்கள்.
- செய்தியாளர்கள் அறவியல் ஆய்வு முறைகளையும் அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் அறிய புள்ளியியல் உதவுகிறது.
- பொதுமக்களின் கருத்துக்களை கூறெடுப்பு ஆய்வு வாயிலாக நடத்துவார்கள்.
- செய்திகளை உள்ளூர்ச் செய்தியாளர், வெளியூர்ச் செய்தியாளர், சிறப்புச் செய்தியாளர், ஆர்வலர்கள் அரசு அறிக்கைகள், செய்தி நிறுவனங்கள் மூலம் பெறலாம்.
- உலகெங்கும் நடக்கும் செய்திகளை கம்பியில்லாத் தந்தி, தொலைபேசி, செல்பேசி, தொலை அச்சு தொலை நகல், வானொலி. தொலைக்காட்சி, கணினி மூலம் உடனுக்குடன் பெறலாம்.
- இலண்டன் டைம்ஸ் இதழின் செய்தியாளர் இந்திய சீனப்போரின் போது நேரடியாகப் போர் நடைபெறிகின்ற இடத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டினார்கள்.
- "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளர் தில்லியிலுள்ள சிறைச்சாலையின் நிலை பற்றி அறிய தானே சிறைப்பட்டு செய்திகளைத் திரட்டித்தந்து புகழ் பெற்றார்.
- விளையாட்டுப் போட்டிகள், புகழ்பெற்ற விசாரணைகள், சட்டப்பேரவை நடவடிக்கைகள், மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை காண செய்தியாளர்களுக்குத் தனி இடம் ஒதுக்கியிருப்பர்.
- செய்தியின் பகுதிகள் தலைப்புச் செய்தி, முகப்புச்செய்தி, உடல்பகுதிச் செய்தி (மூன்று) எனப் பதிப்புகள் பிரிக்கப்பட்டு விடியற்காலையில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்தித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.
இதழியல் கலைச்சொற்கள்:
Bulletin - சிறப்புச்செய்தி இதழ்
Deadline - குறித்த காலம்
Editorial - தலையங்கம்
Fake News - பொய்ச்செய்தி
Flash News - சிறப்புச் செய்தி
Folio No - இதழ் எண்
Green Proff - திருத்தப்படாத அச்சுப்படி
Layout - செய்தித்தாள் வடிவமைப்பு
No comments:
Post a Comment