26 August, 2014

எத்தனாலில் இயங்கும் பேருந்து: இந்தியாவில் முதல்முறையாக தொடக்கம்


இந்தியாவிலேயே முதல்முறையாக எத்தனாலில் இயங்கும் பேருந்தை மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மத்திய சாலைப்போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முதல் முயற்சியாக இயக்கப்பட்ட இந்தப் பேருந்தை தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

இந்தியா ஒவ்வோர் ஆண்டும் ரூ.6 லட்சம் கோடி மதிப்புக்கு பெட்ரோல், டீசல், எரிவாயுவை இறக்குமதி செய்கிறது.

மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் அவற்றின் இறக்குமதியை ஆண்டொன்றுக்கு ரூ.2 லட்சம் கோடியாக நம்மால் குறைக்க இயலும். அதற்கான தொடக்க முயற்சியாக எத்தனால் மூலம் இயங்கும் பேருந்துத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பசுமைப் பேருந்துத் திட்டத்தின் கீழ், எத்தனால் மூலம் இயங்கும் 200 முதல் 500 பேருந்துகளை நாகபுரி மாநகராட்சிக்கு மத்திய அரசு வழங்கும்.

உயிரி எரிபொருள் மூலம் இயங்கும் வாகனம், மின்சாரம்-டீசல் இணைந்து செயல்படும் வாகனம் ஆகியவற்றை இயக்குவதற்கு வழிவகை செய்யக்கூடிய மசோதா நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும்.

தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் எத்தனாலை உற்பத்தி செய்வதால், இந்த பசுமைப் பேருந்து திட்டத்தின் மூலம் அந்த மாநிலங்கள் பெரிதும் பயனடையும்.

மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்கான கொள்கையை மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவருகிறது என்று நிதின் கட்கரி கூறினார்.


நன்றி-தினமணி 
25-08-2014

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...