பாதுகாப்பு, எண்ணெய் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியாவும், வியட்நாமும் திங்கள்கிழமை ஒப்புக்கொண்டுள்ளன.
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தற்போது வியத்நாமில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவர், அந்நாட்டு பிரதமர் குயன் தான் டங், வெளியுறவுத் துறை அமைச்சர் பாம் பின் மின் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
""இந்தச் சந்திப்பின்போது சுஷ்மா ஸ்வராஜ் இரு நாடுகளிடையேயான பல்வேறு வர்த்தகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்.
பாதுகாப்பு, எண்ணெய் உற்பத்தித் துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாக இந்தியா, வியத்நாம் இடையே ஒப்புதல் அளிக்கப்பட்டது.
வியட்நாமில் உள்ள எண்ணெய் உற்பத்தித் துறையில் இந்தியா முதலீடு செய்வது குறித்தும் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தினார்'' என்று வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.
நன்றி-தினமணி
26-08-2014
No comments:
Post a Comment