மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரை ஆர் சுழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே
இலக்கணக்குறிப்பு:
விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
சொற்பொருள்:
மெய் –உடல்
விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து
விரை – மணம்
நெகிழ – தளர
ததும்பி – பெருகி
கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சயசய – வெல்க வெல்க
மெய் –உடல்
விதிர்விதிர்த்து – உடல் சிலிர்த்து
விரை – மணம்
நெகிழ – தளர
ததும்பி – பெருகி
கழல் – ஆண்கள் காலில் அணியும் அணிகலன்
சயசய – வெல்க வெல்க
இலக்கணக்குறிப்பு:
விடேன் – தன்மை ஒருமை வினைமுற்று
பொருள் : உடையாய் - என்னை ஆளாக உடையவனே, உன் - உனது, விரை ஆர் - மணம் நிறைந்த, கழற்கு - திருவடிகளைக் குறித்து, என் - என்னுடைய, மெய் அரும்பி - உடல் புளகித்து, விதிர்விதிர்த்து - நடுநடுங்கி, கை தலைவைத்து - கைகளைச் சிரமேல் வைத்து, கண் நீர் ததும்பி - கண்களில் நீர் நிரம்பி, உள்ளம் வெதும்பி - மனம் வாடி, பொய் தவிர்ந்து - பொய்யொழுக்கத்தினின்றும் நீங்கி, உன்னை - உன்னை, போற்றி - வணக்கம், சயசய போற்றி - வெற்றி வெற்றி வணக்கம், என்னும் - என்று துதிக்கின்ற, கை - ஒழுக்கத்தை, நெகிழவிடேன் - அடியேன் நழுவவிடேன், (ஆகையால்) என்னை - எனது, நிலைமையை, கண்டு - நோக்கி, கொள் - என்னை ஏற்றுக் கோடல் வேண்டும்
நூல் குறிப்பு:
நூல் குறிப்பு:
- திருவாசகம் சைவ சமயக் கடவுளான சிவன் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.
- இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
- பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது.
- திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை.
- பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
- திருவாசகத்தில் 51 திருப்பதிகங்கள் உள்ளன. இவற்றுள் மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன
- ஜி யு போப் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்
- ஜி.யு.போப்:
“உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்கவாசகரை விடப் புலமை, உழைப்பு, துன்பத்தைப் பொறுத்தல், இடையறா நிலையான பக்தி ஆகியவற்றுடன் நம் மனதை கவர்கின்றவர் யாரும் இல்லை” என்கிறார் ஜி.யு.போப்.
No comments:
Post a Comment