ஐகாரக் குறுக்கம் என்பது, ஐகாரம் தனக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து
குறைந்து ஒன்றரை மாத்திரையாகவும் ஒரு மாத்திரையாகவும் ஒலிப்பது.
ஐகாரம் + குறுக்கம் = ஐகாரக்குறுக்கம்.
ஐகாரம் தன்னைச் சுட்டிக் கூறும்பொழுதே இரண்டு மாத்திரையளவு
ஒலிக்கும். மொழிக்கு முதல், இடை,
கடை ஆகிய இடங்களில் வரும்பொழுது, மொழிக்கு
முதலில் ஒன்றரை மாத்திரையகவும், இடை மற்றும் கடையில் ஒரு
மாத்திரையகவும் குறைந்து ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதே ஐகாரக்
குறுக்கமாகும்.
எ.கா:
ஐந்து
|
- ஐகாரம் மொழிக்கு முதலில்
|
- 1 1/2 மாத்திரை
|
வளையல்
|
- ஐகாரம் மொழிக்கு இடையில்
|
- 1 மாத்திரை
|
மலை
|
- ஐகாரம் மொழிக்கு கடையில்
|
- 1 மாத்திரை
|
ஐப்பசி, வைகல் - முதல்
கடைசி, இறைவன் - இடை
மழை, நகை , கடை - இறுதி
கடைசி, இறைவன் - இடை
மழை, நகை , கடை - இறுதி
ஐகாரம் அளபெடுக்கும்போது
குறைந்து ஒலிப்பதில்லை,
நசைஇ, அசைஇ
ஒளகாரக்குறுக்கம்
ஒளகாரம் நெடில் எழுத்து
என்பதால் இரண்டு மாத்திரை பெறும். ஒளகாரம் சொல்லுக்கு முதலில் வரும்போது குறைந்து
ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிப்பதை ஒளகாரக்குறுக்கம் என்பர்.ஒளகாரக்குறுக்கம் ஒரு மாத்திரை நேரம் ஒலிக்கும்.
ஒளவையார், மௌவல், வௌவால்.
ஒளகாரம் தனியே ஒலிக்கும்போது
குறைந்து ஒலிப்பதில்லை.
தற்சுட்டு அளபு ஒழி ஐம்
மூவழியும்
நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
நையும் ஒளவும் முதல் அற்று ஆகும்
(நன்னூல் 95)
(பொருள்: ஐகார எழுத்து சொல்லில் வரும்போது, தன்னைச்சுட்டிக் கூறும் இடத்திலும் அளபெடையிலும் தவிர மற்ற இடங்களில்
(சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும்) குறைந்தே ஒலிக்கும். ஒளகார எழுத்தும்
சொல்லின் முதலில் வரும்போது குறைந்து ஒலிக்கும். )
மகரக்குறுக்கம் என்பது
மகர ஒற்று, குறைந்து ஒலிப்பதைக் குறிக்கும். மகரக்குறுக்கம் இரண்டு வகைப்படும்.
- தனிமொழி
ணகர, னகர ஒற்று எழுத்துகளை அடுத்து வரும் மகரமெய் எழுத்து,
குறைந்து ஒலிக்கும்.
மருண்ம், உண்ம்
போன்ம், சென்ம்
போன்ம், சென்ம்
- புணர்மொழி
இரண்டு சொற்கள்
சேரும்போது, முதல் சொல்லின் இறுதியில் மகர
ஒற்று வந்து, இரண்டாம் சொல்லின் முதல் எழுத்தாக வகரம்
வந்தால் மகர ஒற்று குறுகும்.
தரும் வளவன்
வாழும் வகை
வாழும் வகை
மகர ஒற்று அரை மாத்திரை
ஒலிக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் குறைந்து ஒலிக்கும் மகரக்குறுக்கம் கால்
மாத்திரையே பெறும்.
ண, ன முன்னும், வஃகான் மிசையும்
மக்குறுகும்.
(நன்னூல். 96)
(நன்னூல். 96)
பொருள்:
வகரத்திற்கு முன்பும் ண், ன் மெய் எழுத்துகளுக்குப் பின்பும் மகர ஒற்று,
குறைந்து ஒலிக்கும்.
இரண்டு சொற்கள்
சேரும்போது முதல் சொல்லின் இறுதியில் ல், ள் ஆகிய
மெய் எழுத்துகள் வந்து இரண்டாம் சொல்லின் முதலில் தகர எழுத்து வந்தால் ல், ள் ஆகியவை ஆய்த எழுத்தாக மாறிவிடும்.
அல்
|
+
|
திணை
|
=
|
அஃறிணை
|
முள்
|
+
|
தீது
|
=
|
முஃடீது
|
இந்த ஆய்த எழுத்து, குறைந்து கால் மாத்திரையாக ஒலிக்கும். இதையே ஆய்தக்குறுக்கம் என்று கூறுவர்.
ல, ள ஈற்று இயைபின் ஆம் ஆய்தம் அஃகும்
(நன்னூல் 97)
(பொருள்: ல், ள் ஆகிய எழுத்துகள் ஆய்த எழுத்தாகத் திரியும். அந்த
ஆய்த எழுத்து, குறைந்து ஒலிக்கும். )
No comments:
Post a Comment