31 July, 2014
30 July, 2014
மணிப்பூரில் உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம்
மணிப்பூரில், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகிழக்குப் பிராந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
மணிப்பூரில், ஜிரிபம் - துபுல் - இம்பால் பகுதிகளை இணைக்கும் வகையில் 111 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நோனி என்னுமிடத்தின் அருகே 141 மீட்டர் உயரம் கொண்ட ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில், பெல்கிரேடு- பார் இடையேயான 139 மீட்டர் உயரம் கொண்ட ரயில்வே பாலம்தான் தற்போது உலகிலேயே உயரமானதாகக் கருதப்படுகிறது. அதனைவிட மணிப்பூரில் அமைக்கப்பட இருக்கும் ரயில்வே பாலம் அதிக உயரமானதாகும். இந்தப் பாலம் கட்டும் பணி, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும்.
மணிப்பூரில் நிறைவேற்றப்பட இருக்கும் அகல ரயில் பாதைத் திட்டம், பட்கயில் உள்ள செங்குத்தான மலைப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இந்த ரயில்பாதைத் திட்டத்துக்காக 54.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 46 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. பல இடங்களில் உயரமான தூண்கள் கட்டப்படுகின்றன. இதில் ஜிரிபம் - துபுல் இடையே 4.9 கிலோ மீட்டர் தூரத்துக்கும், துபுல் - இம்பால் இடையே 10.75 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட இருக்கும் சுரங்கப் பாதைகள் நீளமானதாகும்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது 360 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலகத்திலேயே மிக உயரமான பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலமாகும் என்று அவர் தெரிவித்தார்.
வெள்ளைப் புலிக்கு ஒரே பிரசவத்தில் 4 வகை குட்டிகள்
ஒடிஸாவில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் ஒரு வெள்ளைப் புலி, ஒரே சமயத்தில் அரிய வகையான கரும் புலிக் குட்டி உள்பட 4 வகை புலிக் குட்டிகளை ஈன்ற அதிசயம் நிகழ்ந்துள்ளது. மேலும், உயிரியல் பூங்காவில் இதுபோன்று கரும் புலிக்குட்டி பிறப்பது இதுவே முதல்முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நந்தன்கானன் உயிரியல் பூங்காவின் இயக்குநர் சுதர்ஸன் பாண்டா செவ்வாய்க்கிழமை கூறியதாவது: "சினேகா' என்ற வெள்ளை நிறப் பெண் புலிக்கும் அதன் ஜோடியான "மணீஷ்' என்ற ஆண் புலிக்கும் இந்தக் குட்டிகள் பிறந்துள்ளன. இதில் ஒன்று கரும்புலிக்குட்டி, மற்றொன்று வெள்ளை நிறக்குட்டியாகும். மூன்றாவது, அடர்த்தி குறைந்த கரிய நிறத்தில் உள்ளது. நான்காவது குட்டி வங்கப்புலியின் நிறத்தில் உள்ளது. உலகப் புலிகள் தினத்தையொட்டி இந்தக் குட்டிகள் பிறந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
சனி கிரகத்தின் நிலாவில் 101 வெந்நீர் ஊற்றுகள்
Map showing the locations of all known 101 geysers along the tiger
stripes fissures at the south pole of Enceladus
நாசாவின் காஸினி விண்கலம், சனிக் கிரகத்தின் பனி நிலாவான என்சிலேடஸில் 101 தனித்துவ வெந்நீர் ஊற்றுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
அந்த நிலாவின் அடிநிலப்பகுதியில் இருந்து திரவ நிலை நீர் மேலே வந்திருப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த 7 ஆண்டுகளாக காஸினியின் கேமரா, இந்தச் சிறிய நிலாவின் தெற்கு முனைப் பகுதியில் படங்களை எடுத்து ஆராய்ந்து வருகின்றது.
காஸினி ஹைஜன் மிஷன் என்பது நாஸா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆராய்சித் திட்டம்.
கலிங்கத்துப்பரணி- 9 ஆம் வகுப்பு சமச்சீர்
சொற்பொருள்:
- தீயின்வாய் - நெருப்பில்
- சிந்தை - எண்ணம்
- கூர - மிக
- நவ்வி - மான்
- முகில் - மேகம்
- மதி - நிலவு
- உகு - சொரிந்த(பொழிந்த
- புனல் - நீர்
இலக்கணக் குறிப்பு:
- வெந்து, உலர்ந்து, எனா, கூர - வினையெச்சங்கள்
- செந்நாய் - பண்புத் தொகை
- கருமுகிலும் , வெண்மதியும் - எண்ணும்மை
- கருமுகில், வெண்மதி - பண்புத்தொகைகள்
- கடக்க ஓடி, இளைத்து - வினையெச்சங்கள்
- வியர்த்த வியர்வன்றோ - பெயரெச்சம்
பிரித்தெழுதுக:
- வாயினீர் - வாயின் + நீர்
- வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து
- காடிதனை - காடு + இதனை
- கருமுகில் - கருமை + முகில்
- வெண்மதி - வெண்மை + மதி
ஆசிரியர் குறிப்பு:
- கலிங்கத்துப் பரணியை இயற்றியவர் சயங்கொண்டார்.
- இவர், திருவாரூர் மாவட்டத்திலுள்ள தீபங்குடி என்னும் ஊரினர். முதல் குலோத்துங்கச் சோழனின் அரசவைப் புலவராகத் திகழ்ந்தவர்.
- பரணிக்கோர் சயங்கொண்டார் எனப் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாராட்டியுள்ளார்.
- இசையாயிரம், உலாமடல் ஆகிய நூல்களையும் இயற்றியுள்ளார்.
- இவரது காலம் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டு.
நூற் குறிப்பு:
- ஆயிரக்கணக்கான யானைகளாப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்குப் பரணி என்பது பெயர்.
- இது தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று.
- பரணி இலக்கியங்களுள் தமிழில் தோன்றிய முதல் நூல் கலிங்கத்துப் பரணி.
- கலிங்க மன்னன் அனந்தபன்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான்.
- அவ்வெற்றியைப் பாராட்டி எழுந்த இந்நூல் தோல்விவுற்ற கலிங்க நாட்டின் பெயரால் அமைந்துள்ளது.
- இந்நூல் ஐந்நூற்றுத் தொண்ணூற்றொன்பது தாழிசைகள் உள்ளன.
- சயங்கொண்டாரின் சமகாலப் புலவரான ஒட்டக் கூத்தர் இந்நூலைத் "தென்தமிழ்த் தெய்வப்பரணி" எனப் புகழ்ந்துள்ளார்.
பரணி இலக்கியங்கள்:
- தக்கயாகப்பரணி
- மோகவதைப்பரணி
- சீனத்துப்பரணி
- வங்கத்துப்பரணி
- பாசவதைப்பரணி
- திராவிடத்துப்பரணி
ஆயிரம் யானை அமரிடை வென்ற
மாணவ னுக்கு வகுப்பது பரணி
-
பன்னிரு பாட்டியல்
*
பேரறிஞர் அண்ணா "எனக்கு விருப்பமான இலக்கியம் ஒன்று
உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே" என்றார்.
29 July, 2014
காமன்வெல்த் போட்டி: தமிழக பளுதூக்கும் வீரர் சதீஷுக்கு தங்கப் பதக்கம்
20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் சதீஷ் குமார் பங்கேற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டியில் சதீஷ் குமார் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இதே போட்டியில், மற்றொரு இந்திய வீரர் ரவி கட்லு வெள்ளிப் பதக்கம் வென்றார். வெண்கலப் பதக்கத்தை ஆஸ்திரேலிய வீரர் பிரான்கோயிஸ் எட்டூண்டி வென்றார்.
22 வயதான சதீஷ் சிவலிங்கம் 149+179 என மொத்தம் 328 கிலோ எடையை தூக்கி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அமெரிக்க மருத்துவத் துறை உயர் பதவியில் இந்தியர்
அமெரிக்காவின் மிசிசிபி மாகாண மனநல மருத்துவ வாரியத்தின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சம்பத் சிவாங்கி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் மருத்துவத் துறையின் உயர் பொறுப்பை வகிக்கும் முதல் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர் என்ற பெருமையை சம்பத் சிவாங்கி பெற்றுள்ளார்.
அடுத்த ஓராண்டு அவர் இப்பதவியில் இருப்பார். முன்ன தாக மாகாண மருத்துவ வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக சம்பத் சிவாங்கி இருந்தார். 2005 முதல் 2008-ம் ஆண்டு வரை அமெரிக்க சுகாதாரத் துறை அமைச்சகத்தின் ஆலோசகராக வும் சம்பத் சிவாங்கி பணியாற்றியுள்ளார்.
ஒரு மரத்தில் 40 வகையான பழங்கள்
அமெரிக்காவில் உள்ள சைராகஸ் பல்கலை கழகத்தில் சாம் வான் அகேன் தாவரவியல் பேராசிரியராக உள்ளார். விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
இந்த முயற்சி எப்படி என்றால் "ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும் ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார்.
தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அழகான அந்த மரம் அனைவரையும் அருகில் ஈர்க்கும் வண்ணம் காட்சியளிக்கிறது.
இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில்,என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும் என்றும், கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குவதாகவும், இதுபோன்ற தாவர ஆராய்ச்சியை தான் இனி அதிகமாக மேற்கொள்ளவுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
28 July, 2014
டெங்குவை கட்டுப்படுத்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்கள்
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக தாங்கள் உருவாக்கியுள்ள
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கொசுக்களை இந்தியாவில் பரிசோதிக்க, பிரிட்டனைச்
சேர்ந்த "ஆக்ஸிடெக்' என்ற நிறுவனம் அனுமதி கோரியுள்ளது.
"513ஏ' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆண் கொசுக்களால்
இனப் பெருக்கம் செய்யப்படும் கொசுக்கள், இனச்சேர்க்கையில்
ஈடுபடும் பருவத்தை அடைவதற்கு முன்னதாகவே, அதாவது பிறந்த 2
முதல் 5 நாள்களுக்குள் இறந்துவிடுவதால்,
கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் எனவும், அதனால் டெங்கு காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும் எனவும் அந்நிறுவனம்
கூறியுள்ளது.
இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்
இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக
சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்-International Union for
Conservation of Nature - IUCN) தெரிவித்துள்ளது.
உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு
வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள்
இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள
பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட
பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத
பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அபாயத்தில் இருக்கும் பறவையினங்கள் சிவப்புப் பட்டியலில்
சேர்க்கப்படுகின்றன.
பறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு
காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.
[பன்னாட்டு
இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature -
IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை
பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.இச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவே
முதலாவதும்,
பெரியதுமான உலகளாவிய சூழலியல்
வலை அமைப்பாகும்.
இதன்
தலைமைச்செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் அமைந்துள்ளது]
27 July, 2014
20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி
20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் இந்திய நேரப்படி ஜூலை24, வியாழக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு கண்கவர் கலைநிகழ்ச்சி, வண்ணமிகு வாணவேடிக்கையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
ஒலிம்பிக்கில் கோலோச்சியவரான ஸ்காட்லாந்து சைக்கிள் வீரர் சர் கிறிஸ் ஹாய், காமன்வெல்த் கோலை (குயின் பேட்டன்) பிரிட்டிஷ் ராணி இரண்டாம் எலிசபெத்திடம் ஒப்படைக்க, காமன்வெல்த் செய்தியை வாசித்த ராணி, பின்னர் போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “20-வது காமன்வெல்த் போட்டியை தொடங்கி வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்” என குறிப்பிட்டார்.
71 நாடுகளைச் சேர்ந்த 4,929 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களின் இசை நிகழ்ச்சி, சச்சின் டெண்டுல்கரின் சிறிய வீடியோ காட்சி ஆகியவை இந்தியாவின் பெருமையை பறைசாற்றுவதாக அமைந்தன. யுனிசெப் அமைப்பின் நல்லெண்ண தூதரான சச்சின், வீடியோவில் தோன்றி உலகம் முழுவதும் வாழும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். 35 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட செல்டிக் பார்க், பாலிவுட் பிரபலங்களின் இசை நிகழ்ச்சியால் அதிர்ந்தது.
போட்டியில் பங்கேற்கும் 71 நாடுகளின் கொடி அணி வகுப்பு சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்றது. இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் விஜய் குமார் இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல, அவர் பின்னால் சக வீரர், வீராங்கனைகள் அணிவகுத்துச் சென்றனர்.
டி.எஃப்.ஏ.-(TFA-Trade Facilitation Agreement) ஏற்க முடியாது - இந்தியா
ஏழை மக்களுக்கான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்வரை, உலக வர்த்தக அமைப்பின் (டபிள்யூடிஓ-WTO) வர்த்தக வசதியேற்படுத்தும் ஒப்பந்தத்தை (டி.எஃப்.ஏ.-TF (Trade Facilitation) Agreement) ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்தது.
ஜெனீவாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 2 நாள் பொதுக் குழுக் கூட்டம், வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்தக் கூட்டத்தில், உலக நாடுகளிடையே தாராள வர்த்தகத்தை ஊக்குவிக்கும் புதிய நெறிமுறைகள் அடங்கிய வர்த்தக வசதியேற்படுத்தும் ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், இந்தியா சார்பில் பங்கேற்ற டபிள்யூடிஓ அமைப்புக்கான இந்தியத் தூதர் அஞ்சலி பிரசாத் வெள்ளிக்கிழமை பேசியதாவது: 'ஏழை மக்களின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் பிரச்னைக்கும், ஏழை நாடுகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இதர பிரச்னைகளுக்கும் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். அவ்வாறு தீர்வு காணப்படும்வரை, டி.எஃப்.ஏ. ஒப்பந்தத்தை இந்தியா ஏற்க முடியாது. பிரச்னைக்குத் தீர்வு காணும்வரை, டி.எஃப்.ஏ. ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிப்பதையும் ஒத்திவைக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார். இதனையேற்று, டி.எஃப்.ஏ. ஒப்பந்த நடைமுறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்தை அறிய புதிய இணையதளம் "மை கவ்'
அரசு
நிர்வாகத்தில் நாட்டு மக்கள், தங்கள் கருத்துகளையும்,
ஆலோசனைகளையும் வழங்கும்
வகையில் "மை கவ்' (http://mygov.nic.in/)
என்ற புதிய
இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி
தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தில்லியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
- கங்கை நதியைத் தூய்மைப்படுத்துதல்,
- பெண் குழந்தைகளுக்கான கல்வி
- சுத்தமான இந்தியா,
- திறன் மிக்க இந்தியா,
- வேலைவாய்ப்பு மற்றும்
- கணினிமயமாக்கப்பட்ட இந்தியா
இணையதளத்தில் தற்போதைக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)
இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1
தமிழ் வணக்கம் தற்கால இலக்கிய மரபாகிவிட்டது பாரதிதாசனின் இயற்பெயர் சுப்புரத்தினம். பாரதியாரின் கவிைதகள் மீது கொண்ட பற்றின் காரணமா...
-
* தமிழை பக்தி மொழி (இரக்கத்தின் மொழி) என்று கூறியவர் மறைத்திரு தனிநாயக அடிகள். * சமய மறுமலர்ச்சிக் காலம் என்பதும், பக்தி இலக்கியக் க...
-
ஆற்றவும் கற்றார்அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடில்லை - அந்நாடு வேற்றுநா டாகா தமவேயாம் ஆயினால் ஆற்றுணா வேண்டுவ தில். ...