மணிப்பூரில், உலகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகிழக்குப் பிராந்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாவது:
மணிப்பூரில், ஜிரிபம் - துபுல் - இம்பால் பகுதிகளை இணைக்கும் வகையில் 111 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில்பாதைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, நோனி என்னுமிடத்தின் அருகே 141 மீட்டர் உயரம் கொண்ட ரயில்வே பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில், பெல்கிரேடு- பார் இடையேயான 139 மீட்டர் உயரம் கொண்ட ரயில்வே பாலம்தான் தற்போது உலகிலேயே உயரமானதாகக் கருதப்படுகிறது. அதனைவிட மணிப்பூரில் அமைக்கப்பட இருக்கும் ரயில்வே பாலம் அதிக உயரமானதாகும். இந்தப் பாலம் கட்டும் பணி, 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவடைந்து விடும்.
மணிப்பூரில் நிறைவேற்றப்பட இருக்கும் அகல ரயில் பாதைத் திட்டம், பட்கயில் உள்ள செங்குத்தான மலைப்பகுதியில் அமைக்கப்படுகிறது. இந்த ரயில்பாதைத் திட்டத்துக்காக 54.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 46 சுரங்கப் பாதைகள் அமைக்கப்படுகின்றன. பல இடங்களில் உயரமான தூண்கள் கட்டப்படுகின்றன. இதில் ஜிரிபம் - துபுல் இடையே 4.9 கிலோ மீட்டர் தூரத்துக்கும், துபுல் - இம்பால் இடையே 10.75 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமைக்கப்பட இருக்கும் சுரங்கப் பாதைகள் நீளமானதாகும்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் செனாப் ஆற்றின் மீது 360 மீட்டர் உயரத்தில் ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதான் உலகத்திலேயே மிக உயரமான பகுதியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே பாலமாகும் என்று அவர் தெரிவித்தார்.
finally which is the highest manippur or jammu kashmir
ReplyDelete