28 July, 2014

இந்தியாவில் அழியும் நிலையில் 173 பறவையினங்கள்


இந்தியாவில் 173 பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாக சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் (ஐ.யூ.சி.என்-International Union for Conservation of Nature - IUCN) தெரிவித்துள்ளது.
உயிரினங்களின் பாதுகாப்பு நிலை குறித்து ஆண்டுதோறும் அந்த அமைப்பு வெளியிடும் சிவப்புப் பட்டியலில், இந்த ஆண்டில் புதிதாக 8 பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்தமான் வாத்து, அந்தமான் பச்சைப் புறா, சாம்பல் நிற தலையுள்ள பச்சைப் புறா, சிவப்புத் தலையுள்ள ஃபால்கன் கழுகு உள்ளிட்ட பறவையினங்கள் இடம்பெற்றுள்ளன.
இதேபோன்று, உலக அளவில் 13 சதவீத பறவையினங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அபாயத்தில் இருக்கும் பறவையினங்கள் சிவப்புப் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
பறவைகளின் வாழிடங்களை அழித்ததே அவற்றின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்று சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

[பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (International Union for Conservation of Nature - IUCN), உலகிலுள்ள இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பாகும்.இச்சங்கம் 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இதுவே முதலாவதும், பெரியதுமான உலகளாவிய சூழலியல் வலை அமைப்பாகும்.
இதன் தலைமைச்செயலகம் சுவிட்சர்லாந்து நாட்டின் செனிவா நகருக்கு அண்மையாக உள்ள கிலான்டு பகுதியில் அமைந்துள்ளது]

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...