22 November, 2014

இசையமுது - 6 ஆம் வகுப்பு சமச்சீர்


மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ் 
வையத்தமுதே வாவா!

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

சொல்பொருள்
  •  வானப்புனல் - மழைநீர்
  •  வையத்து அமுது - உலகின் அமுதம்
  •  வையம் - உலகம்
  •  தகரப்பந்தல் - தகரத்தால் அமைக்கப்பட்ட பந்தல்
  • புனல் - நீர்
  • பொடி - மகரந்தப் பொடி
  •  தழை - செடி 
  •   தழையா வெப்பம் - பெருகும் வெப்பம், குறையா வெப்பம்
  •   தழைத்தல் - கூடுதல், குறைதல்
  •  தழைக்கவும் - குறையவும்.
ஆசிரியர்க் குறிப்பு 
  •  புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் - பாரதிதாசன்.
  •  இயற்பெயர் - கனகசுப்புரத்தினம்
  •   பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார்.
  •   காலம்: 29.04.1891 - 21.04.1964(அகவை 72)
  •   பெற்றோர்: கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்
  •   திருமணம்: 1920ல் பழநி அம்மையாரை மணந்தார்.
  •   படைப்புகள்: பாண்டியன் பரிசு, அழகின் சிரிப்பு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு.
  •  கல்லாத பெண்களின் இழிவைக் கூறும் நூல் - இருண்ட வீடு.
  •   கற்ற பெண்களின் சிறப்பைக் கூறும் நூல் - குடும்ப விளக்கு.
  •  இயற்கையை வர்ணிக்கும் நூல் - அழகின் சிரிப்பு.
  •   பாரதிதாசன் நடத்திய இதழ் - குயில்.

1 comment:

  1. அருமையான பாடல். மிக்க நன்றி.

    ReplyDelete

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...