22 November, 2014

இன்றைய கேள்விகள்-22/11/14

1. ' மும்மணிக்கோவை ,' என்ற நூலின் ஆசிரியர் 
A.அழகிய சொக்கநாதர் 
B.பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்
C.இராமச்சந்திரக்கவிராயர் 
D.தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் 

2.இரட்டை மணிமாலையின் ஆசிரியர் யார் ?
A.திருமூலர் 
B.மாணிக்கவாசகர்
C.ஆண்டாள்
D.காரைக்கால்அம்மையார்

3.உலக நீதி என்னும் நூலை இயற்றியவர் 
A.ஒளவையார்
B.உலகநாதர் 
C.சிவப்பிரகாச சுவாமிகள்
D.அதிவீர ராமபாண்டியன் 

4.சீதக்காதி நொண்டி நாடகம் யாரால் இயற்றப்பட்டது ?
A.உமறுப்புலவர் 
B.பனு அகமது மரைக்கையார்
C.குணங்குடி மஸ்தான்
D.பீர் முகமது 

5.புதிய ஆத்திச்சூடியைப் படைத்தவர் 
A.பாரதிதாசன் 
B.பாரதியார் 
C.வாணிதாசன் 
D.சுரதா 

6. "தமிழர் தடங்கல்" என்ற நூலை எழுதியவர் 
A.க ப அறவாணன் 
B.திரு வி க 
C.தேவநேயப்பாவாணர்
D.மு . வரதராசனார் 
"
7." ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் "- இதில் அமைந்துள்ள மோனை 
A.ஒரூ உ மோனை 
B.பொழிப்பு மோனை 
C.கீழ்க்கதுவாய் மோனை 
D.கூழை மோனை 
(ஓரூஉ மோனை 1, 4
         ஓரடியில் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் வரும் மோனை ஓரூஉ மோனை
ஆகும்.
(எ.கா) ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்)

8. "உப்பில்லாக் கூழிட்டாலும் உண்பதே அமிர்தமாகும் "- இதில் அமைந்துள்ள மோனை 
A.முற்றுமோனை 
B.ஒரூ உ மோனை 
C.இணை மோனை
D.பொழிப்பு மோனை  
( ஓரடியில் முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் வரும் மோனை பொழிப்பு
மோனை ஆகும்.)

9. " எறும்புந்தன் கையால் எண் சாண் " -என்று பாடியவர் 
A.வெள்ளிவீதியார் 
B.காக்கைப்பாடினியார்
C.நச்செள்ளையார் 
D.ஒளவையார் 

10.சற்புத்திர மார்க்கம் எந்த நெறியில் அடங்கியுள்ளது ?
A.தோழமை நெறி 
B.மெய்ம்மை நெறி 
C.நன்மகன்மை நெறி 
D.தொண்டு நெறி 

11.மதோன்மத்தர் என்பது யாரைக் குறிக்கிறது ?
A.திருமால் 
B.சிவன் 
C.முருகன் 
D.இந்திரன் 

12.தமிழ்விடுதூது எந்த வெண்பாவினால் அமைந்தது ?
A.கலிப்பா 
B.வஞ்சிப்பா 
C.ஆசிரியப்பா 
D.வெண்பா 

13.போலிப் புலவர்களின் தலையில் குட்டுபவர் 
A.அதிவீரராம பாண்டியர்
B.ஒட்டக்கூத்தர்
C.வில்லிப்புத்தூரார்
D.கம்பர் 

14. "பதுமத்தான் "என்ற சொல் குறிக்கும் சொல் 
A.முருகன் 
B.பிரம்மன் 
C.சிவன் 
D.விஷ்ணு 

15.மார்போலையில் எழுதும் எழுத்தாணியாக முத்தொள்ளாயிரம் கூறுவது 
A.ஈட்டி 
B.தூரிகை 
C.தந்தம் 
D.வேல் 

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...